சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான குளிர்கால சிறப்பு பயிற்சி முகாம் 2023 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது; பள்ளி கல்வி துறையை பொறுத்தவரை இன்று முக்கியமான நாள். பள்ளி கல்வி துறையில் 2 ஆம் கட்டமாக 519 பள்ளிகளில் இன்று 1000 வகுப்புகளை முதலமைச்சர் திறந்து வைத்தார். ஏற்கனவே முதல் கட்டமாக சில மாதங்களுக்கு முன் 1000 வகுப்புகளை திறந்து வைத்தார். அடுத்தகட்டமாக 1200 வகுப்பறைகள் தயார் நிலையில் இருக்கிறது. ஜனவரி மாதத்தில் அதையும் திறக்க இருக்கிறோம். அத்துடன் தேசிய வாலிபால் போட்டி திருச்சியிலும், செஸ் போட்டி வேலூரிலும் நடக்கிறது. இன்றைக்கு குளிர்கால சிறப்பு பயிற்சியை மாணவர்களுக்கு துவக்கி உள்ளோம்.

ஜனவரி 7ஆம் தேதி நடக்க உள்ள பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை தள்ளி வைப்பது குறித்து, முதல்வரிடம் ஆலோசனை கேட்கப்படும். கணினிகள் இல்லாமல் குறியீட்டு முறை பயிற்சியையும், ரோபோட்டிக்ஸ் அடிப்படை பயிற்சியை ராமநாதபுரத்தில் துவக்கியதாகவும், இதை 2 நாட்களாக அதை சுற்றியுள்ள 10 மாவட்டத்தில் 100 மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதில் 1500 மாணவர்கள் வரை இதற்கு பதிவு செய்ததாகவும் இப்படி கணிணி சார்ந்து எந்தெந்த மாதிரியான விஷயங்களை மாணவர்களிடம் கொண்டு செல்லலாம் என்றும் மைக்ரோசாப்ட் உடன் எம்.ஓ.யு கையெழுத்து இட்டிருப்பதாகவும், ஒவ்வொரு கிராமப் புற மாணவர்களிடமும் கணினியை கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு புத்தக வழி கல்வியை தாண்டி பல்வேறு திறமைககான பயிற்சி வழங்க இருக்கிறோம். எல்லா விதத்திலும் எல்லா பிள்ளைகளுக்கு கிடைப்பது போல் நமது பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று முதலமைச்சரின் எண்ணத்தை ஈடு செய்யும் வகையில் இது நிகழ்ச்சியை தொடங்கி இருக்கிறோம்.
தென் மாவட்டங்களில் மட்டுமின்றி சென்னையிலும் ( இங்கேயும்) மழையால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் வழங்க ஆன்லைன் மூலமும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், மழையால் நனைந்த புத்தகங்கள் மட்டுமில்லாமல் சீருடைகளையும் வழங்க வேண்டும் என்று, முதலமைச்சர் சொன்னதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். தென் மாவட்டங்களில் பள்ளியில் அரையாண்டு தேர்வில் 4 தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. அந்த தேர்வுகள் ஜனவரி 2 ல் பள்ளி துவங்கும் போது தேர்வு நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும், திருநெல்வேலியில் ராதாபுரம், நெல்லை டவுன், நாங்குநேரியில் சில இடங்களில் தண்ணீர் வடிந்தாலும் தூத்துக்குடியில் தண்ணீர் வடியவில்லை. அதனால் 4 ஜே.டிக்கள் நியமிக்கப்பட்டு அவர்களுடன் ஆலோசனை நடந்தது என்றும், திருநெல்வேலியில் 10 பள்ளிகள் ரொம்ப சேதம் அடைந்தது. தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டத்திலும் சில பள்ளி சேதம் இருக்கிறது.

அதையும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே உரிய பாதுகாப்பு இருக்கும் பட்சத்தில் மட்டுமே அது அன்றைக்கு திறக்கப்படும். கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தேர்வை எழுத முடியாது. தள்ளி வைக்க வேண்டும் என பெரிய அளவிற்கு கோரிக்கை வரவில்லை. எனினும், ஜனவரி 7 ல் நடக்க உள்ள பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை தள்ளி வைப்பது குறித்து, முதல்வரின் ஆலோசனை கேட்கப்படும் எனவும், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சாதிய தீண்டாமை இருக்கிறது என்பது தொடர்பான சர்வே வெளியிட்டு இருக்கிறார்கள். அது தொடர்பாக ஆய்வு செய்வோம். அது போன்ற தீண்டாமை தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இல்லை.
இரண்டு லட்சம் பேர் பங்கேற்ற முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வு கணினி வழியில் நடத்திய ஆசிரியர் தேர்வு வாரியம், 41000 பேர் விண்ணப்பித்துள்ள பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு பழைய முறையில் நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரிடம் விளக்கம் கேட்கப்படும். பள்ளிகள் துவங்கும் போது ஒவ்வொரு முறையும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் கூறினார்.