விழுப்புரம் புறவழிச் சாலையில் பாட்டில் ஏற்றி வந்த சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை விழுப்புரம் புறவழிச் சாலையில் அமைந்துள்ளது. இந்த புறவழிச் சாலையில் அதிகாலையில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி பாட்டில் ஏற்றுக்கொண்டு சென்ற சரக்கு லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எல்லீஸ்சத்திரம் குறுக்குச் சாலையில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரியில் கொண்டு செல்லப்பட்ட பாட்டில்கள் சாலையில் சிதறி கிடந்தது போக்குவரத்து போலீசார் உடனடியாக அங்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்ததுடன் விபத்து கொள்ளான லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதிக அளவு போக்குவரத்து இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது தொடர்ந்து போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.