திமுக அரசின் சாதனைகளை பொறுக்க முடியாமல் பொய் பிரச்சாரம் – ஆர்.எஸ். பாரதி பேட்டி..!

2 Min Read

கடலூரில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி நிருபர்களிடம் கூறியதாவது;- எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் கூட்டணியை கையாள தெரியாமல் திமுக அரசின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார்.

- Advertisement -
Ad imageAd image

இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய பட்ஜெட்டாக இருப்பதாக தமிழக நிதி நிலை அறிக்கையை ஊடகங்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் பாராட்டி உள்ளனர்.

ஆர்.எஸ். பாரதி

தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றி இருக்கிற திமுகவின் ஆட்சியை எடப்பாடியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை போதை பொருள் முழுக்க திமுக ஆட்சியில் தான் இருக்கிறது என்பதை போல அண்ணாமலை பேசி இருக்கிறார்.

இந்தியாவிலேயே அதிகப்படியான போதை பொருள் குஜராத்தில் அதானி துறைமுகத்தில் 2 ஆயிரம் கோடி அளவுக்கு போதை பொருள் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அங்கிருந்து தான் இந்தியா முழுமைக்கும் சப்ளை செய்யப்படுகிறது.

ஆர்.எஸ். பாரதி

இதனால் போதை பொருட்களை அதிகமாக விற்பது பாஜகவினர் தான். முன்னாள் டிஜிபி டி.கே ராஜேந்திரன், கமிஷனர் ஜார்ஜ். முன்னாள் அதிமுக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீது குட்கா ஊழல் குற்றசாட்டு இருந்தது.

அப்போது யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்று தெரியும். மேலும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. ஆனால் இதையெல்லாம் மறந்து விட்டு இன்றைக்கு அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

ஆர்.எஸ். பாரதி

திமுகக்காரர்கள் எங்கேயாவது போதைப்பொருள் விற்று இருக்கிறார்களா? யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை தி முக எடுக்க தயங்கியதில்லை. அப்படி தவறு செய்தவரை 24 மணி நேரத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல் கடலூர் எம்.பி மீது எழுந்த குற்றச்சாட்டில் கூட எந்த வித தலையிடும் இல்லாமல் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் குட்கா வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீது எடப்பாடி பழனிசாமி என்ன நடவடிக்கை எடுத்தார்.

ஆர்.எஸ். பாரதி

தமிழக தகவல் தொழில் நுட்பத்துறையினர் மீது எடப்பாடி பழனிசாமி அவதூறாக பேசியுள்ளார். இன்னும் 2 நாட்க ளில் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் திமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் சட்டரீ தியான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

கடலூர் மாநகர செயலாளர் ராஜா, கடலூர் மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர். பால கலைக்கோவன். ஒன்றிய செயலாளர் தங்க ஆனந்தன், விஜயசுந்தரம், தனஞ்ஜெயன், அவைத்தலைவர் பழனிவேல் பொதுக்குழு பாலமுருகன்,

ஆர்.எஸ். பாரதி

மாணவரணி பாலாஜி, தகவல் தொழில்நுட்பம் கார்த்தி, பிரவீன், சரத், மண்டலகுழு பிரசன்னா, நிர்வாகிகள் கார் வெங்கடேசன் முதுநகர் செந்தில், ரகுரா மன், ஆறாமுது வழக்கறிஞர் அணி இளைஞரணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Share This Article
Leave a review