மணல் லாரி மோதி கன்றுக் குட்டி சாவு. போலீசார் வழக்கு பதிவு. கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.

1 Min Read
மணல் ஏற்றிச்செல்லும் லாரிகள்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கரடிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் கோவிந்தன் இவர் மாடு வளர்த்து வருகின்றார். இவருடைய மாடுகளை வயல்வெளிக்கு ஓட்டி செல்லும் போது விழுப்புரத்தில் இருந்து ஏனாதிமங்கலம் மணல் குவாரிக்கு மணல் ஏற்ற வந்த லாரி மோதி கன்று குட்டி சம்பவ இடத்திலே உயிரிழந்தது.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலம் அருகில் தமிழ்நாடு அரசு தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைத்துள்ளது. இந்த மணல் குவாரியில் இருந்து அதிக அளவு லாரிகள் மணல் ஏற்றிக்கொண்டு கிராமங்கள் வழியாக செல்லுகின்றன.இந்தப் பகுதிகளில் கட்டுப்பாட்டை இழந்து பல நேரங்கள் அதிவேகமாக மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் செல்வது வழக்கமாக உள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

மணல் ஏற்றிச்செல்லும் லாரி

மணல் குவாரி அமைப்பது என்பது நிலத்தடி நீர்மட்டத்தை இல்லாமல் செய்வதாகும் என்று நீர்வள அறிஞர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இது மட்டுமல்லாமல் இந்த பகுதியில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கரடிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் கோவிந்தன் இவர்  மாடு வளர்த்து வருகின்றார்.  இவருடைய மாடுகளை வயல்வெளிக்கு ஓட்டி செல்லும் போது விழுப்புரத்தில் இருந்து ஏனாதிமங்கலம் மணல் குவாரிக்கு மணல் ஏற்ற வந்த லாரி மோதி கன்று குட்டி சம்பவ இடத்திலே உயிரிழந்தது.

இது குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இது போன்ற மணலாரிகளின் அதிவேக பயணம் மக்களை அச்சுறுத்திய வண்ணமே உள்ளது உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அவற்றை சரி செய்ய வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றன.

Share This Article
Leave a review