லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் கைது..!

1 Min Read
மதனை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்த சம்பவம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சிவா கடைக்கு மின்சார மின் இணைப்பு வழங்குவதற்காக மின்சார அலுவலகத்திற்கு சென்றார். கடைக்கு மின்சாரம் மின் இணைப்பு வழங்குவதற்கு 4000 ரூபாய் வணிக ஆய்வாளர் மதன் என்பவர் லஞ்சம் கேட்டார். பின்னர் 4000 ருபாய் கொடுத்து லஞ்சம் வாங்கிய மின்சார அலுவலகத்தில் பணிபுரியும் வணிக ஆய்வாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது.

- Advertisement -
Ad imageAd image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல் பட்டி கிராமத்தில் சிவா என்பவர் அவருக்கு சொந்தமான சிவா கடைக்கு மின்சார மின் இணைப்பு பெறுவதற்காக மேல்பட்டி கிராமத்தில் மின்சாரத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதனை மேல்பட்டி கிராமத்தில் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் வணிக ஆய்வாளர் மதன் என்பவர் சிவா அளித்த மனுவினை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

வணிக ஆய்வாளர் மதன்

பின்னர் கடைக்கு மின்சார மின் இணைப்பு வழங்குவதற்காக கடையின் உரிமையாளர் சிவாவிடம் மின்சார அலுவலகத்தில் பணிபுரிய வணிக ஆய்வாளர் மதன் என்பவர் சிவாவிடம் நான்காயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து வணிக ஆய்வாளர் மதன் என்பவர் லஞ்சம் கேட்டதனால்,சிவா வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.அதனை தொடர்ந்து பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சிவாவிடம் ரசாயனம் தடவிய நான்காயிரம் ரூபாய் நோட்டினை கொடுத்து அனுப்பி இருந்தனர்.

சிவாவிடம் ரசாயனம் தடவிய பெட்டி

அந்தப் பணத்தை சிவா மதனிடம் கொடுத்தார். அதனை பெற்றுக் கொண்ட மதன் அங்கிருந்து மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக வணிக ஆய்வாளர் மதனை பிடித்தனர்.பின்னர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டு, மின்சார அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரியும் மதனை கைது செய்தனர்.

இதனால் மின்வாரிய ஊழியரை மதனை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

Share This Article
Leave a review