Kanniyakumari : திருட்டு நகையை அடமானம் வைக்க மறுத்த நிதி நிறுவன ஊழியர் மற்றும் அவரது பெற்றோர் மீது கொடூர தாக்குதல் .!

2 Min Read
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்

திருட்டு நகையை அடமானம் வைக்க மறுத்த தனியார் நிதி நிறுவன ஊழியர் மற்றும் தடுக்க முயன்ற அவரது பெற்றோரரை வீடு புகுந்து தாக்கிய 3 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு .

- Advertisement -
Ad imageAd image

முக்கிய குற்றவாளி உட்பட  2 குற்றவாளிகள் பிடிபட்ட நிலையில் தலைமறைவாக உள்ள மேலும் ஒரு குற்றவாளியை கைது  செய்யும் பனி தீவிரம் .

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள விலவூர், அருவித் தோட்டம் பகுதியில் வசித்து வரும் மிக்கேல் ஜார்ஜ் என்பவரின் மனைவி ரோஸ்மேரி (வயது 55) இவர் பாலப்பள்ளியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவர்களது மகன் சுஜின் (30) தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் .

 

சுஜின் மற்றும் அவரது பெற்றோர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மருத்துவமனை

சுஜின் வேலை பார்க்கும் நிதி நிறுவனத்தில் கீழமூலச்சல் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (38) என்பவர் திருட்டு நகையை அடமானம் வைக்க சென்றுள்ளார். அப்போது திருட்டு நகைகளை இங்கு அடகு வைக்க முடியாது என சுஜின் கூறியுள்ளார்.

இதனால் சுஜின் மீது ஜெகதீஷ்க்கு முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதத்தில் சம்பவத்தன்று சுஜின் வீட்டிற்கு சென்ற ஜெகதீஷ் மற்றும் ஜெகதீசின் கூட்டாளிகளான காட்டாத் துறை பகுதியை சேர்ந்த பிஜூ (34), கொற்றிக் கோடு பகுதியை சேர்ந்த கிருபாகரன் (26) ஆகியோர் சுஜினிடம் தகராறு செய்து கையால் தாக்கியுள்ளனர். இதை கண்ட அவரது அம்மா ரோஸ்மேரி தடுக்க முயன்றபோது மரக்கட்டையை கொண்டு தலையில் தாக்கியதோடு தலைமுடியை பிடித்து இழுத்து சுவரில் மோத செய்துள்ளனர்.

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/director-nelson-wife-monisha-under-police-investigation-in-connection-with-bsp-leader-amstrong-murder/

இதை தடுக்க முயன்ற ரோஸ்மேரியின் கணவரை செடி தொட்டியை எடுத்து அவர் மீது அந்த கும்பல் வீசியுள்ளது . இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதியில் உள்ளவர்கள் ஓடி வருவதற்குள் 3 – பேரும் வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துவிட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.

தக்கலை காவல் நிலையம்

இந்த தாக்குதலில் பலத்த படுகாயம் ஏற்பட்ட ரோஸ்மேரி தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக அவர் தக்கலை போலீசில் புகார் செய்தார். இப்புகாரின்பேரில் தாக்குதல் நடத்திய 3 – பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை பிடிக்க தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை தக்கலை சப் -இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், இம்மானுவேல் மற்றும் போலீசார்,அவரவர் வீடுகளில் பதுங்கி இருந்த ஜெகதீஷ், கிருபாகரன் ஆகிய இரண்டு பேரை பிடித்து கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் மற்றும் ஒரு குற்றவாளியான பிஜூ வை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Share This Article
Leave a review