பிரிட்டன் துணை பிரதமர் ராஜினாமா…காரணம் என்ன?

1 Min Read
பிரிட்டன் துணை பிரதமர் டோம்னிக்

பிரிட்டன் துணை பிரதமர் டோம்னிக் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனது ஊழியர்களை கொடுமைப் படுத்தியதாக டோம்னிக் மீது புகார்கள் எழுந்த நிலையில் ராஜினாமாவை அறிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

நீதித்துறை செயலாளரான டோம்னிக்  ராப், பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளராகவும், பிரெக்சிட் செயலாளராகவும் பணிபுரிந்தபோது, ​​ஊழியர்களிடம் துஷ்பிரயோகம் செய்ததாக பிரதமர் ரிஷி சுனக்கிற்கு  எட்டு முறை புகார்க வந்த அடுத்த நாளே டோம்னிக் ராஜினாமாவை அறிவித்துள்ளார்.

ஊழியர்களை இழிவுப்படுத்தியதாக கூறியதற்கு டோம்னிக்  ராப் மறுத்துள்ளார். என் மீது வந்துள்ள புகார்கள் உறுதி செய்யப்படுமேயானால் ராஜினாமா செய்வதாக டோம்னிக்  ராப் கூறினார்.

ரிஷி சுனக்கிற்கு  வந்த 8 புகார்கள் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு எதிராக ஊழியர்களை கொடுமைப்படுத்தப்பட்டதாக இரண்டு புகார்கள் உறுதி செய்யப்பட்டது. இதற்கு டோம்னிக் மறுத்துள்ளார்.பின்பு ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

டோம்னிக் அளித்துள்ள ராஜினாமா கடிதத்தில்,”விசாரணையின் கண்டுபிடித்தவை எல்லாம் போலியானவை என்றும், இந்த விசாரணை ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை அமைத்தது”என்றும்  கூறினார். நான் உறுதியளித்ததிலிருந்து நிலையில் ராஜினாமா செய்வது என் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a review