செருப்பால் அடித்த திமுக நிர்வாகியின் கணவர். கைது நடவடிக்கைக்கு உத்தரவிட்ட ஆட்சியர்.

1 Min Read
செருப்பால் அடிக்கும் காட்சி

சாலையில் கிடக்கும் பழைய பேப்பர், பாட்டில்களை எடுத்து விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வரும் ஆதி பழங்குடி இன பெண்ணின் பின்புறத்தில் ஒருவர் காலணியால் அடித்த வீடியோ சமுக வலைதளங்களில் வெளியான நிலையில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில் திமுக நிர்வாகியின் கணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள குறிச்சி வடக்குதெருவில் இரண்டு பெண்கள் இரண்டு சிறுமிகள் கை குழந்தைகளுடன் சாலையோரம் கிடக்கும் பழைய பாட்டில்கள் , பழைய பேப்பர்கள் மற்றும் இரும்பு பொருட்களை எடுத்து அவற்றை கடையில் விற்பனை செய்வதற்காக எடுத்து சென்றபோது அவர்களை  தடுத்த  பேராவூரணி வடக்கு ஒன்றிய மகளிர்  அணி அமைப்பாளர் (திமுக) தீபலட்சுமியின்  கணவர் சாமிநாதன். அந்தப் பெண்களை தரக்குறைவாக பேசி, அவர்கள் கீழே இருந்து சேமித்து வைத்து இருந்த பொருட்களை பறித்து தரையில் கொட்டியவர் ஒரு பெண்ணின் பின்புறத்தில் காலணியால் அடிக்கிறார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத்தை தொடர்பு கொண்டு பெண்ணை காலணியால் தாக்கியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து வாட்டாத்தி கோட்டை காவல்துறையினர் கிராம நிர்வாக அலுவலர் வாயிலாக தாக்குதலுக்கு ஆளான துறவிக்காடு எம்.ஜி.ஆர்.நகரில் வசித்து வரும்  பொண்ணு என்ற ஆதி பழங்குடி இன  பெண்ணை தேடிப்பிடித்து புகார் பெற்று வழக்குபதிந்தனர். பின்னர் தலைமறைவாகி இருந்த திமுக  பெண் நிர்வாகியின் கணவர் சாமிநாதனை காவல்துறையினர் கைது செய்தனர். தாமாக முன்வந்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியரை சமுக ஆர்வலர்கள் பாராட்டுகின்றனர்.

- Advertisement -
Ad imageAd image
Share This Article
Leave a review