உதகையில் சர்வதேச பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர விசாரணை..!

2 Min Read

நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் இரண்டு சர்வதேச பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம், கிருத்திகா உதயநிதி பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீசார் உடனடியாக அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.

- Advertisement -
Ad imageAd image

இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. தமிழ்நாடு முழுவதும் சமீப காலமாக பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

போலீசார் தீவிர விசாரணை

அடையாளம் காண முடியாத அளவிற்கு இ-மெயில் மூலம் இந்த மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதால் போலீஸார் இந்த சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் யார் என்பதை கண்டறிய முடியாமல் தொடர்ந்து குழம்பி வருகின்றனர்.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இரண்டு பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச குட்செப்பர்ட் பள்ளி

உதகை அருகே உள்ள முத்தோரை பாலாடா பகுதியில் இயங்கி வரும் சர்வதேச குட்செப்பர்ட் பள்ளி மற்றும் தீட்டுக்கல் பகுதியில் இயங்கி வரும் ஜே.எஸ்.எஸ் சர்வதேச பள்ளி ஆகியவற்றில் வெடிகுண்டுகள் இருப்பதாக மிரட்டல் வந்துள்ளதாக பள்ளி நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த பள்ளியில் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதை அடுத்து இந்த இரண்டு பள்ளிகளுக்கும் காவல்துறையினர் விரைந்தனர்.

போலீசார் தீவிர விசாரணை

அப்போது மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் முழுமையாக சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சந்தேகத்துக்கிடமான பொருள் எதுவும் கிடைக்காததால், இது புரளி என்பது தெரியவந்தது.

இருப்பினும் பள்ளிகளுக்கு தொடர்ந்து இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள்

இதனிடையே பள்ளிகளுக்கு வந்த இமெயில் தற்போது வெளியாகியுள்ளது. அமைச்சர் உதயநிதியின் மனைவியும், திரைப்பட இயக்குநருமான கிருத்திகா உதயநிதி பேரில் போலியாக அந்த மெயில் அனுப்பப்பட்டுள்ளது.

அல் பாதர் என்ற அமைப்பின் பெயரில் அனுப்பப்பட்டுள்ள அந்த மெயிலில், ஜாபர் சாதிக் வழக்கில், கிருத்திகாவை தொடர்புபடுத்தி நடவடிக்கை எடுத்தால் பள்ளியில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது போலீஸார் இந்த மெயில் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This Article
Leave a review