வாக்குச்சாவடியில் முதியவரை ஏமாற்றி தாமரை சின்னத்தில் ஓட்டு போட்ட பாஜக பிரமுகர் – புலம்பும் வீடியோ வைரல்..!

1 Min Read

புதுச்சேரி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட வி.மணவெளி பகுதியில் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் முதியவர் ஒருவரை பாஜகவினர் உதவி செய்வது போல் அழைத்து வந்துள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

அங்கிருந்த வாக்குச்சாவடி பணியாளர்களிடம் முதியவருக்கு பார்வை தெரியவில்லை என கூறியுள்ளனர். இதை அடுத்து அவரது பூத் சிலிப், வாக்காளர் அட்டையை சரிபார்த்து பெயரை படித்த பின் முதியவரிடம் கையொப்பத்தை பணியாளர்கள் பெற்றுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல்

அப்போது பார்வை தெரியாதவர் என அழைத்து வரப்பட்ட முதியவர் கையெழுத்தும் போட்டுள்ளார். அப்போது கூட உஷார் ஆகாத வாக்குச்சாவடி பணியாளர்கள், உதவிக்கு வந்த நபருடன் முதியவரை வாக்களிக்கும் திரைமறைவு பகுதிக்கு அனுப்பியுள்ளனர்.

அந்த முதியவருடன் அங்கு சென்ற பாஜக பிரமுகர் தாமரை சின்னத்துக்கு முதியவரின் வாக்கை தனது கையால் பதிவு செய்து விட்டு வெளியே அழைத்து வந்து ரோட்டில் விட்டு விட்டு சென்றுள்ளார்.

வாக்குச்சாவடியில் முதியவரை ஏமாற்றி தாமரை சின்னத்தில் ஓட்டு போட்ட பாஜக பிரமுகர்

இதனிடையே அந்த முதியவர், பாஜக பிரமுகர் தன்னை ஏமாற்றி அவர்களே ஓட்டு போட்டு விட்டதாக தனது நண்பரிடம் புலம்பும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அப்போது என்னை அழைத்துக் கொண்டு போய் அவர், பட்டனை அழுத்தி பதிவு செய்துவிட்டார் என புலம்புகிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக பிரமுகர்

இதனிடையே வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட முதியவர் நல்ல உடல்நலத்துடன் இருசக்கர வாகனத்தை இயக்கியவாறு வாக்குச்சாவடிக்கு வரும் சிசிடிவி காட்சியும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக திமுகவினர் தேர்தல் துறையிடம் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளனர்.

Share This Article
Leave a review