“இன்னிக்கு பேசுவாங்க, நாளைக்கு கழட்டி விடுவாங்க…வந்தா வருது, போனா போகுது” பிடிஆர் பேசியதை சுட்டிக் காட்டிய பாஜக…

2 Min Read
பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கடந்த வருடம் கூறியது என்பதை சுட்டிக் காட்டி பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி ட்வீட் செய்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

அமைச்சர் உதயநிதி, சபரீசன் இருவரும் குறுகிய காலத்தில் பல்லாயிரக்கணக்கான சொத்துக்களை சேர்த்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக ஆடியோ ஒன்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார்.இதனையடுத்து, இரண்டாவது ஆடியோவையும் அண்ணாமலை வெளியிட்டிருந்தார்.

அந்த ஆடியோவில் இருப்பது என்னவென்றால்,” ஒரு நபர் ஒரு பதவி என்ற கொள்கைக்கு நான் அரசியலுக்கு வந்த நாள் முதலே ஆதரவு அளித்து வருகிறேன். பா.ஜ.க-விடம் எனக்குப்பிடித்த விஷயம் இதுதான். கட்சியையும், மக்களையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு பிரிந்திருக்க வேண்டும் அல்லவா? இங்கே எல்லா முடிவுகளையும், எம்எல்ஏ-க்களும், அமைச்சர்களும் தான் எடுக்கின்றனர் என்று கூறியிருந்தார்.

நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நிதியமைச்சர், பாஜக மாநில தலைவர் யாரோ ஒருவர் குறிப்பிட்ட எந்த நபருடனும் சொல்லாத ஒன்றை, ஆடியோவாக வெளியிடும் அளவிற்கு கீழ்த்தரமாக இறங்கியுள்ளார். அவரது அரசியலின் தரம் இவ்வளவுதான்.எங்களது நம்பிக்கை நட்சத்திரமான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மகத்தான வரவேற்பை பெற்றுள்ளார் என்று விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் நாராயணன் திருப்பதி தனது ட்வீட்டில்,”செப்டெம்பர் 11 அன்று இரட்டை கோபுரம் விழுந்த போது கீழ்த்தளத்தில் இருந்தவன் நான், 2009, செப்டெம்பர் 15, 2008 அன்று 150 வருடம் வளமாக இருந்த Lehman Brothers வங்கி திவாலான போது 400 பேருக்கு தலைவரா இருந்தவன் நான். எதுவும் நிரந்தரம் இ‌ல்லை. அது எனக்கு  பலத்தை குடுக்கிறது.

என் அடையாளம், என் முன்னோர்கள் கற்றுக் கொடுத்தது என் சைவ வழிபாடு. இறை நம்பிக்கை. இன்னிக்கு பேசுவாங்க, நாளைக்கு கழட்டி விடுவாங்க. வந்தா வருது; போனா போகுது”. இது பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வருடம் கூறியது.

“இன்றைய ஆளும் கட்சி, இரட்டை ஆதிக்கத்தினால் வீழ்ச்சியை சந்தித்தாலும், 30,000 கோடி முறைகேடுகளினால் Lehman Brothers போல் வீழ்ந்தாலும்”  அன்று அவர் பேசியவை தற்போதைய விவகாரத்திற்கும் பொருந்தும் வகையில் உள்ளது. உண்மையில். பி டி ஆர் உணர்ந்தே பேசியுள்ளார் ” என்று சாடி பேசியுள்ளார்.

Share This Article
Leave a review