கட்சி ரீதியாக பார்வையாளர்களை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார்.இதன்படி, ராமநாதபுரம் – முரளிதரன், செங்கல்பட்டு தெற்கு – ரவி, கிருஷ்ணகிரி கிழக்கு – வெங்கடேசன், சேலம் மேற்கு – வரதராஜன், தர்மபுரி – முனிராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக கால் ஊன்றிய பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதற்காக என்னென்னவோ செய்து வருகிறது அந்த கட்சி.
அரசு காவல்துறை முக்கிய பொறுப்பில் இருந்த அண்ணாமலையை தலைவராக நியமித்து வலு சேர்க்க நினைத்த பாஜகவுக்கு பின்னடைவே நிகழ்ந்து வருகிறது. ஒரு பக்கம் அதிமுக, பாஜக தலைவர்கள் மனக்கசப்பு. மற்றொரு பக்கம் நாடாளுமன்றத் தேர்தல். இந்த நிலையில் குறைந்தது மூன்று இடங்களிலாவது பாஜக வெற்றி பெற முயற்சி மேற்கொண்டு வருகிறது

அதற்கு தடையாக இருப்பது அதிமுகவின் பிளவு. அதை சரி செய்ய எவ்வளவோ முயற்சி செய்து வரும் நிலையில் அது முடியாமல் போனால் கட்சியை பலப்படுத்த வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இருக்கிறது. இதனால் கட்சி ரீதியாக பொறுப்பாளர்களை நியமித்து தொண்டர்களை தயார் படுத்தும் நிலையில் தயாராகிறது பாஜக அந்த வகையில் தற்போது
ஐந்து மாவட்டங்களுக்கு, கட்சி ரீதியாக பார்வையாளர்களை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார்.
இதன்படி, ராமநாதபுரம் – முரளிதரன், செங்கல்பட்டு தெற்கு – ரவி, கிருஷ்ணகிரி கிழக்கு – வெங்கடேசன், சேலம் மேற்கு – வரதராஜன், தர்மபுரி – முனிராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.