- சிறுமி பாலியன் வன்கொடுமை தொடர்பாக புகார் அளிக்க சென்ற பெற்றோரை காவல் ஆய்வாளர் தாக்கியதாக வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து, அவரது பெற்றோர், பக்கத்து வீட்டில் வசிக்கும் சதீஷ் என்பவர் மீது அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றிருக்கின்றனர்.
அப்போது காவல் ஆய்வாளர் தங்களை தாக்கியதாகவும், சதீஷின் பெயரை புகாரிலிருந்து நீக்க வற்புறுத்தியதாகவும் சிறுமியின் பெற்றோர் வீடியோ வெளியிட்டிருந்தனர்.
இதுசம்பந்தமாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் அமர்வு, விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து முடிவெடுக்க, வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தது.