- பேருந்தில் இடம் மாறி அமர சொன்ன நடத்துனர் மீது சரமாரி தாக்குதல் நடத்திய மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், கடந்த 16ம் தேதி இரவு, தனியார் பேருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தஞ்சாவூருக்கு புறப்பட்டுள்ளது. அப்போது பேருந்தில் ஏறிய மூன்று இளைஞர்களில் இருவர் முன்னால் உட்காரந்துள்ளனர். அப்போது பேருந்து நடத்துனர் விகாஷ் (23) அவர்களை பின்னால் சீட்டில் வந்து உட்காரமாறு கூறியுள்ளார். இதனால் போதையில் இருந்தவர்கள் இடத்தை மாற்றி அமர முடியாது என நடத்துனரிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த மூன்று இளைஞர்களும் சேர்ந்து நடத்துனரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த நடத்துனர் விகாஷ் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த தாக்குதல் குறித்து விகாஷ் கும்பகோணம் காவல்நிலையத்தில்புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பேருந்தில் இருந்த சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில், கும்பகோணத்தைச் சேர்ந்த உதயசந்திரன் (26), ஜனசந்திரன் (25), தமிழ்நேசன் (26) ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.