நீலகிரி மாவட்டம், அடுத்த குன்னூர் அருகே உள்ள தடை செய்யப்பட்ட கொலக்கம்பை செங்குட்டுவராயன் மலைக்கு 10 இளைஞர்கள் நேற்று மாலை மலை ஏற்றத்திற்க்காக சென்ற போது திண்டுக்கல் நத்தம் கோபால்பட்டியை சேர்ந்த பிரவீன் குமார் என்ற இளைஞர் மாயம்.
தற்போது 300 அடி பள்ளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டு உள்ளார். நீலகிரி மாவட்டம், அடுத்த குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை செங்குட்டுவராயன் மலைக்கு நேற்று மாலை 10 இளைஞர்கள் தடை செய்யப்பட்ட பகுதிக்கு மலை ஏற்றத்திற்க்காக சென்றுள்ளனர்.

அப்போது அனைவரும் மலையில் ஏறி கொண்டிருக்கும் போது மலையில் இருந்து தேனீக்கள் கூடு கலைந்து உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது மலையேற்றத்தில் இருந்த இளைஞர்கள் தேனீக்களை கண்டு நாளா புறமும் ஓடி சென்றதாக கூறப்படுகிறது.
பின்பு மலையில் இருந்து இறங்கும் போது அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். அதில் திண்டுக்கல் நத்தம் பகுதியில் உள்ள கோபால்பட்டியை சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் திடீரென மாயமாகி உள்ளார்.

அப்போது உடனே சென்ற நண்பர்கள் பிரவீனை கூச்சலிட்டும், தவறுதலாக எங்கேனும் விழுந்து உள்ளாரா என தேடி பார்த்துள்ளனர். அப்போது எங்கு தேடியும் நீண்ட நேரமாக கிடைக்காத நிலையில், உடனே கொலக்கம்பை காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் இரவு நேரம் என்பதாலும், வனவிலங்குகளின் நடமாட்டம் இருக்கும் என்பதாலும் செங்குட்டுவராயன் மலைக்கு செல்லும் பாதி வழியிலேயே திரும்பி உள்ளனர்.

பின்பு இன்று காலை முதல் மாயமான இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தற்போது செங்குட்டுவராயன் மலை பகுதியில் உள்ள 300 அடி பள்ளத்தில் ட்ரோன் கேமிரா உதவியுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டு உள்ளார்.

தற்போது பள்ளத்தில் இறங்கி இளைஞரின் உடலை மீட்கும் பணியில் தீயணைப்பு துறை வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.