ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4 ஆம் தேதி வெளியானது. அதில் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 40 இடங்களையும் வென்றுள்ளது.

சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் 200-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியாகி உள்ளது. அதில் சட்டமன்ற உறுப்பினர்களை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மதிப்பதில்லை எனவும்,

மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் நலத்திட்ட பணிகளை செய்வதற்காக 15 முதல் 18 சதவீதம் வரை கையூட்டு கேட்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினராகிய நான் கொடுக்கும் புகார் கடிதத்தை என்னவென்று கூட பார்க்காமல் குப்பையில் பேசுவதாகவும் குற்றம் சாட்டி எழுதிய கடிதம் தற்போது வெளியாகி உள்ளது.