லஞ்சம் வாங்கி சிறையில் இருக்கும் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி ஜாமின் மனு மறுப்பு..!

2 Min Read

திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் துணை சூப்பிரண்டு டாக்டர் சுரேஷ்பாபு இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2018 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு அமலாக்க துறையிடம் விசாரணைக்கு வந்து இருப்பதாகவும், வழக்கில் இருந்து விடுவிக்க மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூபாய் 51 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அதில் ரூபாய் 20 லட்சத்தை கடந்த மாதம் வாங்கிய நிலையில் 1 ஆம் தேதியில் மேலும் ரூ 20 லட்சத்தை வாங்குவதற்கு அமலாக்கத்துறை அதிகாரி அங்கி திவாரி திண்டுக்கல்லுக்கு வந்தார்.

- Advertisement -
Ad imageAd image
மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி

திண்டுக்கல் தோமையார்புரம் பகுதியில் அரசு டாக்டரிடம் ரூபாய் 20 லட்சத்தை வாங்கிக்கொண்டு அதிகாரி அங்கித் திவாரி காரில் தப்பிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து திண்டுக்கல் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு தூங்க முடியாமல் தவித்த அவர் பின்னர், மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் அதிகாரி அங்கித் திவாரி தங்கி இருந்த வீடு ஆகியவற்றிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்

மேலும் உயர் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி, அங்கித் திவாரி லஞ்சம் வாங்கியதால் பிற அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அங்கித் திவாரியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் மதுரை சிறையில் இருக்கும் அங்கித் திவாரிக்கு ஜாமீன் கேட்டு அவருடைய தரப்பில் திண்டுக்கல் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜாமீன் மனு என்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது.

Share This Article
Leave a review