குழந்தைக்கு தவறான தடுப்பூசி போடப்பட்டதால் ஆண் குழந்தை உயிரிழப்பு – போலிசார் விசாரணை..!

2 Min Read

குழந்தைக்கு தவறான தடுப்பூசி போடப்பட்டதால் ஆண் குழந்தை இறந்ததாக கூறி அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அரக்கோணம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை அடித்து நொறுக்கி ஆவேசமாக பேசினர். இந்த சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

பிறந்த குழந்தை 45 நாட்களே ஆன நிலையில் ஆண் குழந்தைக்கு மருத்துவர்கள் தவறான தடுப்பூசி போடப்பட்டதால் குழந்தை இறந்து விட்டது என நகர் புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புகுந்து அங்கிருந்த டேபிள், மின்விசிறி மற்றும் ரூபாய் 15 லட்சம் மதிப்பு பல் பரிசோதிக்கும் இயந்திரத்தை அடித்து நொறுக்கி மருந்து மாத்திரைகளை வீசி எறிந்தனர் . மேலும் டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குழந்தைக்கு தவறான தடுப்பூசி போடப்பட்டதால் ஆண் குழந்தை உயிரிழப்பு

ராணிப்பேட்டை மாவட்டம், அடுத்த அரக்கோணம் பழனிபேட்டை விஜயராகவன் தெருவை சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி சர்மிளா. இவர்களுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர்களுக்கு பிறந்த குழந்தை 45 நாட்களே ஆன நிலையில் ஆண் குழந்தைக்கு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த புதன்கிழமை காச நோய் தடுப்பூசி போடப்பட்டது. இதனால் காச நோய் தடுப்பூசி போடப்பட்ட குழந்தைக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. கடந்த 2 நாட்களாக காய்ச்சலில் அவதிப்பட்ட குழந்தை இன்று திடீரென உயிரிழந்தது. குழந்தையை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதில் ஆத்திரம் அடைந்து குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரக்கோணம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு அங்கு பணியில் இருந்த டாக்டர் விக்னேஷிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போலிசார் விசாரணை

மேலும் குழந்தை இறந்த ஆத்திரம் தாங்காமல் அங்கிருந்த டேபிள், 2 மின்விசிறி மற்றும் ரூபாய் 15 லட்சம் மதிப்பு பல் மருத்துவ பரிசோதனை இயந்திரம் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கிருந்த மருந்து மாத்திரைகளை தரையில் தூக்கி வீசி எறிந்தனர். டாக்டரிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து எல்லோரையும் விசாரணை செய்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review