
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள ஸ்ரீவாரி நகரில் பூதநாத சுவாமி பப்ளிக் சாரிடபிள் டிரஸ்ட், மற்றும் கயிலை ஸ்ரீசாஸ்தா ஐயப்ப பக்த ஜன சபை இணைந்து ஐயப்பன் கோவில் கட்ட பூமி பூஜை போடப்பட்டன.

சுமார் ரூ. 4 கோடி செலவில் 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த திருப்பணி தற்போது முடிவடைந்த நிலையில் அதற்கான கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கன்னிமூல கணபதி, ஐயப்பன், மாளிகை புரத்தம்மன் ஆகிய 3 கோயில் கோபுரங்கள் மீது பூஜிக்கப்பட்ட நீரை குருவாயூர் கோவில் நம்பூதிரி ஸ்ரீநாத், நாராயணன் நம்பூதிரி பாட் ஊற்றினார்கள்.

அப்போது கூடியிருந்த பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என்று பக்தி முழக்கமிட்டனர். விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, நடிகையும் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சர் ரோஜா, திரைப்பட இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, திருச்செல்வம், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு, போலீஸ் ஐ.ஜி சுப்புராஜ் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டன.