அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் : பீப் பதிவால் ஸ்தம்பித்த கொடைக்கானல்..!

2 Min Read

அயோத்தியில் நேற்று ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்ற பொழுது திமுகவைச் சேர்ந்த கண்ணன் என்பவர் பீஃப் பிரியாணி சாப்பிட்டு வீடியோ பதிவிட்டதால் பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இந்த நிலையில் அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதித்தது அப்பகுதியில் உள்ளவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

- Advertisement -
Ad imageAd image
சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

அயோத்தியில் நேற்று ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைப்பெற்ற நிலையில் அப்பொழுது மாட்டுகறி பிரியாணி சாப்பிட்டு திமுக கட்சியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் முகநூலிலும் ,சமூக வலைத்தளங்களிலும் வீடியோ பதிவிட்டு உள்ளார். இந்து மதத்தினரை இழிவு படுத்தியதாக கூறி வீடியோ பதிவிட்ட திமுக கட்சியைச் சேர்ந்த கண்ணன் மீது காவல் நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து மக்கள் கட்சியினர் சார்பாக புகார் அளிக்கப் பட்டுள்ளது.

மேலும் புகாரின் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சி மையப் பகுதியில் உள்ள மூஞ்சிகள் பகுதியில் அனைத்து இந்து இயக்கங்கள் சார்பாக சாலை மறியல் போராட்டம் நடந்தது. குறிப்பாகப் போராட்டத்தில் நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து இயக்கத்தினர் கோஷங்களும் எழுப்பப்பட்டு அனைவரும் சாலை மறியல் மற்றும் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதனால் கொடைக்கானலில் முக்கிய பகுதியான மூஞ்சிகள் பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது கொடைக்கானல் சுற்றுலாவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வத்தலகுண்டு திண்டுக்கல் பழனி மதுரை உள்ளிட்ட எந்த ஒரு பகுதிக்கும் செல்ல முடியவில்லை அதேபோல் மலை அடிவாரப் பகுதியிலிருந்து கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களும் மேலே வர முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து நேரிசலால் பொதுமக்கள் அவதி

பல கிலோமீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இரண்டு மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியல் மற்றும் தர்ணா போராட்டம் நீடித்ததால் கொடைக்கானல் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியது அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Share This Article
Leave a review