பிஐஎஸ் நடத்திய திருவள்ளூர் மாவட்ட அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

2 Min Read
இந்திய தர நிர்ணய அமைவனம்

இந்திய தர நிர்ணய அமைவனம் (Bureau of Indian Standards) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இது பொருள்களுக்கான தயாரிப்பு தர சான்றிதழ் (ISI மார்க்), மேலாண்மை அமைப்புகள் சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்/கலைப்பொருட்களுக்கான ஹால் மார்க்கிங் சான்றிதழ்  மற்றும் ஆய்வக சேவை  போன்ற பல்வேறு திட்டங்களை, தொழில்துறையின் நலனுக்காகவும் அதையொட்டி நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகவும் கொண்டு செயல்படுத்துகிறது.

- Advertisement -
Ad imageAd image

இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS) தர நியமங்கள் மற்றும் தரம் குறித்த முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக, மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் BIS அடிக்கடி தொடர்பு கொள்கிறது. BIS செயல்பாடுகள் மற்றும் அவர்களின் துறைகள் தொடர்பான தரநிலைகள் பற்றி அவர்களுக்குக் கற்பிக்க, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் பட்டறைகள்/பயிற்சி நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.

இதன் மூலம் தரம் குறித்த விழிப்புணர்வு  அதிகட்டிப்பதன் மூலம்,   தர நியமங்களை ஏற்றுக்கொண்டு தங்கள் துறைகளில் செயல்படுத்துவதன் மூலம் பொது விநியோகங்களின் தரம் மேம்படுத்தப்படும்.

இந்திய தர நிர்ணய அமைவனம் , சென்னை கிளை அலுவலகம், திருவள்ளூர்  ஆட்சியர் அலுவலகத்தின் மாவட்ட அலுவலர்களுக்கான  விழிப்புணர்வு நிகழ்ச்சியை 18 ஜூலை 2023 இன்று காலை 10:00 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்தது

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் I.A.S,., நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

BIS சார்பாக, ஸ்ரீமதி. ஜி.பவானி, விஞ்ஞானி-இ/ இயக்குனர் & தலைவர், சென்னை கிளை அலுவலகம், இந்திய தர நிர்ணய அமைவனம் , சென்னை, BISன் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

இ-பிஐஎஸ் மற்றும் பிஐஎஸ் கேர் செயலி  உள்ளிட்ட பிஐஎஸ்ஸின் சமீபத்திய வளர்ச்சிகள் பற்றியும் அவர் கூட்டத்தில் விளக்கினார். இந்திய தர நிர்ணய அமைபவனத்தின் , அவர்கள் துறை சார்ந்த  தரநிலைகள் மற்றும் தர சான்றிதழ் விவரங்கள் குறித்து அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

e BIS, BIS இணையதளத்தின் பல்வேறு அம்சங்கள் மற்றும் eBIS இணையத்தில்  உள்ள Know your Standard மூலம் தங்கள் துறைகளுக்குத் தொடர்புடைய தரநிலைகளை எவ்வாறு கண்டறிவது மற்றும் அதைப் பதிவிறக்குவதற்கான நடைமுறைகள் குறித்தும் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஸ்டாண்டர்ட் மார்க் செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.டி.ஜீவானந்தம், விஞ்ஞானி-D/ இணை இயக்குனர், BIS தொழில்நுட்ப விளக்கங்களை கையாண்டார். 120 எண்ணிக்கையிலான, திருவள்ளூர் மாவட்ட அரசு அலுவலர்கள், நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a review