கோவை அருகே பள்ளத்தில் கவிழ்ந்து ஆட்டோ விபத்து- இரண்டு பேர் பலி மூன்று பேர் படுகாயம்.போலிசார் விசாரணை. அப்பகுதி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், தடாகம் சாலை சோமையனூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார்.இவரது வயது (34) இவரது நண்பர்களான வேலாண்டிபாளையத்தை பகுதியை சேர்ந்த ஏழுமலை வயது (45) கருப்பசாமி வயது (51) அய்யனார் வயது (45) சக்திவேல் வயது (39). ஆகியோர் ஐந்து பேரும் தினேஷ்குமார் வீட்டில் இன்று மதியத்திற்கு மேல் இருந்து மது அருந்தி உள்ளனர்.இந்நிலையில் தினேஷ் நண்பர்கள் வெளியே சென்று மது அருந்தலாம் என்று தன் நண்பர்களிடம் கூறினார். அதற்கு நண்பர்களும் சரி என்று கூறினார்கள்.

பின்னர் வெளியில் எங்காவது சென்று மது அருந்தலாம் என்று எண்ணி, ஏழுமலையின் ஆட்டோவில் ஏறினார்கள்.ஆட்டோவில் பயணம் செய்து கொண்டு வீரபாண்டியை அடுத்த மருதங்கரை என்ற மலைவாழ் கிராமப் பகுதிக்கு சென்று,மதுபான கடையில் ஐந்து பேரும் மது அருந்திவிட்டு, தினேஷ் விட்டுக்கு திரும்பி உள்ளனர். ஆட்டோவை ஏழுமலை என்பவர் ஓட்டி வந்த நிலையில், மூலக்காடு என்னும் பகுதியில் இடையே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தீடிரேன்று சாலையோரத்தில் சுமார் 20 அடி பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே ஏழுமலை மற்றும் கருப்புசாமி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இதனை கண்ட அருகில் உள்ளவர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கூறி, பின்னர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தடாகம் உதவி ஆய்வாளர் ஆறுமுகநாயினார் மற்றும் போலீசார், பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம் ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் தாமோதரன், ஆகியோர் ஊர் பொதுமக்கள் உதவியுடன் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி, பிரத பரிசோதனைக்காக அருகிலுள்ள கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயம் அடைந்தவர்களையும் மீட்டு, அவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தடாகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மூலக்காடு என்னும் பகுதி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.