அருப்புக்கோட்டை அருகே பெண் டிஎஸ்பி மீது அத்துமீறி தாக்குதல் , எஸ்.பி நேரில் விசாரணை .!

2 Min Read

அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் , போலீஸ் அதிகாரியின் தலைமுடியை இழுத்துத் தள்ளி நடுரோட்டில் அராஜகத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களால் பரபரப்பு . சம்பவம் நடந்த இடத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றார் .

- Advertisement -
Ad imageAd image

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள்தேவன்பட்டியை சேர்ந்தவர் காளிகுமார் . காளிகுமார் சரக்கு வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார் . இந்நிலையில் நேற்று அவர் சரக்கு வாகனத்தில் திருச்சூரை நோக்கி சென்று கொண்டிருந்த போது , இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் காளிகுமார் சென்ற சரக்கு வாகனத்தை வழிமறித்து , அவரை கீழே இழுத்து அவர்கள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டனர் .

மேலும் அந்த கும்பல் காளிகுமாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர் . சிறிது நேரம் கழித்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து அறிந்து  உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர் .

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உயிருக்கு போராடி கொண்டிருந்த காளிகுமாரை மீட்டு, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர் .

எனினும் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் காளிகுமார் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டதாக அறிவித்தனர் .

இதனிடையில் காளிகுமாரை கொலைசெய்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் இன்று அருப்புக்கோட்டையில் , போராட்டம் நடத்த திட்டமிட்டு , அரசு மருத்துவமனை அருகே திரளாக கூடினர் . இதனை அறிந்த அருப்புக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளார் காயத்ரி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் .

போராட்டத்தில் ஈடுபட முயன்ற காளிகுமாரின் உறவினர்களை பெண் டி.எஸ்.பி காயத்ரி தடுக்க முயன்றபோது கூட்டத்தில் இருந்தவர்கள் டிஎஸ்பி-ஐ கடுமையாக தாக்கினர்.

இதனைத்தொடர்ந்து காவல்துறையினருக்கும் , போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் பேசிய போது பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடந்த சம்பவத்தில் இதுவரை 4 நபர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரித்து வருவதாக தெரிவித்தனர் .

கொஞ்சம் இதையும் படிங்க: https://thenewscollect.com/civil-cases-the-madras-high-court-allowed-the-dravidian-liberation-organization-to-hold-a-protest-against-the-police-katpanchayat-in-civil-cases/

பணியில் இருக்கும் பெண் காவல் துறை அதிகாரியை போராட்ட கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Share This Article
Leave a review