தமிழக அளவில் விளையாட்டு விடுதிகளில் பயில்வதற்கு 24 ல் மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் விழுப்புரம் ஆட்சியர் பழனி

1 Min Read
மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள்

மாவட்ட விளையாட்டு விடுதி விழுப்புரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் மாணவர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, வளைக்கோள் பந்து நீச்சல் டேக்வாண்டா கையுந்து பந்து, கபடி, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ், வில்வித்தை, வெய்ட் லிப்ட் மற்றும் மாணவிகளுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, நீச்சல், வெய்ட் லிப்ட், மேசைப்பந்து ஆகிய விளையாட்டுகள் இருக்கின்றன.

- Advertisement -
Ad imageAd image

இந்த விளையாட்டு விடுதிகளில் இந்த ஆண்டு சேர 6,7,8,9, மற்றும் 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுத் தேர்வுகள் வரும் 24ஆம் தேதி காலை 7 மணி அளவில் விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும். மாவட்ட மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவியர்கள் ஆன்லைன் மூலம் www.sdat.tn.gov  விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 23ஆம் தேதி மாலை 5 மணி ஆகும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

தேர்வு போட்டிகளில் பங்கேற்க 24 ஆம் தேதி வரும் மாணவர்கள் விண்ணப்பம், ஆதார் அட்டை, சான்றிதழ், படிவங்கள் கொண்டு வர வேண்டும்.

இதர விபரங்களை மாவட்ட விளையாட்டு அலுவலக முகவரியில் நேரிலோ அல்லது தொலைபேசியில் 7401703485  தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

Share This Article
Leave a review