சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு, முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு எழுந்துள்ளது. இந்த நிலையில் அவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு நிலையில் வர சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆட்சிக்குழு கூட்ட அரங்கில் நடைபெறும் இந்த ஆய்வு கூட்டத்தில் 27 துறை தலைவர்கள் பங்கேற்றனர். பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழா, தேசிய அளவிலான மற்றும் மாநில அளவிலான நிகழ்ச்சிகளில் பங்கேற்க மட்டுமே இதுவரை ஆளுநர் வந்த நிலையில் தற்போது எந்தவொரு நிகழ்ச்சியும் இல்லாமல் ஆளுநர் பல்கலைக்கழகத்திற்கு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க நேரில் வந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக ஆளுநர் ரவி விமானம் மூலம் சேலம் வந்தடைந்து பல்கலைக்கழக வளாகத்திற்குவந்த ஆளுநரை தற்போது கைது செய்யப்பட்டு ஜாமில் வெளிவந்துள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார். அதனை தொடர்ந்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.
பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதை படம்பிடிக்கவோ அல்லது செய்தி சேகரிக்கவோ செய்தியாளர்களுக்கு எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை. பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ஆய்வில் நடத்திவரும் வேளையில் மாநகர காவல்துறையினர் 7 இடங்களில் பல்கலைக்கழக வளாக்கத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம் 10 நிமிடங்களில் முடிவடைந்ததுதொடர்ந்து புகாருக்குள்ளான துணைவேந்தர் ஜெகநாதனுடன் சுமார் 25 நிமிடம் ஆளுநர் ஆர்.என். ரவி சந்தித்து பேசி உள்ளார். பின்னர் ஆய்வு கூட்டம் முடிந்து ஆளுநர் ஆர்.என். ரவி விருந்தினர் மாளிகைக்கு மதிய உணவுக்கு சென்றார். துணை வேந்தர் மீதான முறைகேடு புகார், கைது நடவடிக்கை, பல்கலை கழகத்தில் நடைபெற்ற போலீஸ் சோதனை செய்யப்பட்டனர். ஆளுநர் ரவி, துணை வேந்தர் ஜெகநாதனிடம் விளக்கம் கேட்டறிந்தார் என கூறப்படுகிறது.
பல்கலைக்கழகத்தில் உள்ள ஒவ்வொரு துறைக்கும் நேரடியாக சென்று துறையில் உள்ள ஆவணங்கள் வரவு, செலவு குறித்து அவர்கள் நேரடியாக சோதனை மேற்கொண்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருபுறம் தமிழக ஆளுநர் தலைமையில் ஆய்வு கூட்டம், மறுபுறம் தமிழக காவல்துறை சோதனை ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பின்னர் பெரியார் பல்கலைக்கழகத்தில் இருந்து கார் மூலம் கோவை புறப்பட்டார், ஆளுநர் ஆர்.என்.ரவி.