திடீரென்று சென்னை திரும்பினார் அஸ்வின் : இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்டிலிருந்து திடீர் விலகல் – காரணம் என்ன..?

2 Min Read

இந்தியா – இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. மேலும் 2 நாட்கள் ஆட்டம் நிறைவடைந்த நிலையில், 500-வது விக்கெட்டை வீழ்த்தி சாதித்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இந்த போட்டியில் இருந்து திடீரென விலகியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image
அஸ்வினின் தாய்க்கு திடீர் உடல்நலக்குறைவு

இது குறித்து விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, அப்போது அஸ்வினின் தாய்க்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், இந்த போட்டியில் இருந்து விலகிய அஸ்வின் உடனடியாக சென்னை திரும்பியதாகவும் கூறியுள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்டிலிருந்து திடீர் விலகல்

இந்த கடினமான நேரத்தில் அணியும், பிசிசிஐ நிர்வாகமும் அஸ்வினுக்கு துணைநிற்கும் எனவும் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். அப்போது அஸ்வின் விலகியதால், நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் மீதம் உள்ள 3 நாட்களிலும் இந்திய அணி 10 பேருடன் மட்டும் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அஸ்வின்

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் என்ற நிலையில் இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. அப்போது ரவீந்திர ஜடேஜா 112 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்டிலிருந்து திடீர் விலகல்

அப்போது அஸ்வின் 37 ரன்களும், துருப் 47 ரன்களும் எடுத்தனர். பின்பு இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி, தொடக்கம் முதலே அதிரடியாக ரன் சேர்த்தது. அப்போது ஜாக் கிராலி 15 ரன்களிலும், ஆலி போப் 39 ரன்களிலும் விக்கெட்டை பறி கொடுத்தனர்.

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்டிலிருந்து திடீர் விலகல்

பின்பு மறுமுனையில் பென் டக்கெட் 88 பந்துகளில் சதம் விளாசினார். மேலும் 2 ஆம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்துள்ளது. இதனிடையே, இந்த போட்டியில் இரண்டாவது முறையாக இந்திய வீரர்கள், ஆடுகளத்தை சேதப்படுத்தும் வகையில் ஓடியதாக இங்கிலாந்து அணிக்கு 5 ரன்கள் வழங்கப்பட்டன.

Share This Article
Leave a review