சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். நடராஜர் சிவகாமசுந்தரி சமேதமாக ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடனமாடிய படியே வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனித் திருமஞ்சனம் வெகு சிறப்பாக நடைபெறும். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளி மாநில பக்தர்களும் கலந்து கொண்டு, சாமியே தரிசனம் செய்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா நேற்று காலை 7 மணி அளவில் வேத மந்திரங்கள் முழங்க தேவாரம், திருவாசகம் பாடி மேலத்தாலத்துடன் கோவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து வருகிற 26 ஆம் தேதி முக்கிய நிகழ்வான தேரோட்டமும், 27 ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெற உள்ளது.

முன்னதாக நடராஜப் பெருமாள் சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகளுடன் தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது. ஆருத்ரா தரிசனத்தையொட்டி நாள்தோறும் காலையும், மாலையும் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெறும். அதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நிகழ்வு வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா 27ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 3 மணி முதல் ஆயிரம் கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு, நடராஜமூர்த்திக்கும் மகா அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து மாலை ஆருத்ரா தரிசன விழா நடைபெற உள்ளது.

நடராஜர் சிவகாமசுந்தரி சமேதமாக ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து நடனமாடிய படியே வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர். புகழ்பெற்ற இந்த ஆருத்ரா தரிசன விழாவை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் கோயில் விழாவிற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். ஏற்பாடுகளே செயலாளர் சிவராமன் தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். கடலூர் எஸ்.பி ராஜாராம் தலைமையில் 300- ருக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.