நாடாளுமன்ற தேர்தலுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ படையினர்..!

1 Min Read

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழில்பாதுகாப்பு படையினர், உள்ளூர் போலீசாருடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

- Advertisement -
Ad imageAd image

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தின் உள்ள முக்கிய இடங்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ படையினர்

கோவையை பொறுத்தவரை ஏற்கனவே இரண்டு கம்பெனி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கபட்டுள்ளனர். கோவை வந்துள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து முக்கிய இடங்களில் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ படையினர்

குறிப்பாக உக்கடம் ,வாலாங்குளம், டவுன்ஹால், குனியமுத்தூர், ஆத்துப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் இவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர.. இவர்கள் உள்ளூர் போலீசாருடன் இணைந்து வாகன சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ படையினர்

இதேபோன்று காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் உட்பட முக்கிய இடங்களிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

Share This Article
Leave a review