- சுருட்ட பள்ளி அணைக்கட்டு மற்றும் கும்மிடிப்பூண்டி அடுத்த பாலவாக்கம் பகுதியை ஒட்டி உள்ள வனப்பகுதியின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரக்கூடிய அதிகப்படியான மழை நீரால் ஆரணி ஆற்று படுகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் கவரப்பேட்டை அடுத்த ஏஎன் குப்பம் அணைக்கட்டு நிரம்பி வினாடிக்கு 1000 கன அடி உபரி நீர் வெளியேறி ஏ.ரெட்டிப்பாளையம், ஆண்டார் மடம் வழியாக பழவேற்காடு ஏரியைச் சென்றடைகிறது.
அதேபோல் ஏ எம் குப்பம் அணைக்கட்டு நிரம்பி வழிவதன் விளைவாக அணைக்கட்டின் கீழ் உள்ள 20 நீர்ப்பாசன ஏரிகள் நிரம்பி பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயனடையும். இதனால் பல்லாயிரக்கணக்கான விவசாய குடும்பங்கள் மேம்படும்.
வெள்ள அபாயத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைக்கட்டுக்கு அருகாமையில் 3 ஆயிரம் மணல் முட்டைகள் பாதுகாக்கப்பட்டு வருவதாக கவரப்பேட்டை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/german-tourists-were-ecstatic-to-watch-rajinikanth-starrer-vetaiyan-in-theatres/
ஆனால் காவல்துறையின் எச்சரிக்கையை மீறி அணைக்கட்டின் மீது ஏறி செல்பி பிரியர்கள் புகைப்படம் எடுத்தும், அணைக்கட்டில் ஆர்ப்பரித்தோடும் மீன்கள் பிடித்தும் வருவதால் உயிர் சேதம் ஏற்படும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.