வன அலுவலருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

1 Min Read
ஜகதீஸ் பகன். மு.க.ஸ்டாலின்

வன அலுவலர்  ஜகதீஸ் பகனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது குறித்து அவர், இராமநாதபுரம் மாவட்ட வன அலுவலரும் மன்னார் வளைகுடா உயிர்க்கோளகக் காப்பகத்தின் இயக்குநருமான  ஜகதீஸ் பகன், யுனெஸ்கோ அமைப்பால் வழங்கப்படும் உயிர்க்கோளகக் காப்பக மேலாண்மைக்கான ‘மைக்கேல் பட்டீஸ்’ விருதுக்கு தேர்வாகி, தமிழ்நாடு வனத்துறைக்கும் அரசுக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு நம் பாராட்டுகள்

நமது அரசு அமைத்த Marine Elite படையால்தான் இது சாத்தியமானது என அவர் கூறியதைக் கண்டு பெருமையடைந்தேன்.

ஜூன்-14 அன்று பாரிஸ் நகரத்தில் நடைபெறும் நிகழ்வில் விருதைப் பெறவுள்ளதோடு, மன்னார் வளைகுடாப் பகுதியின் இயற்கை வளத்தைப் பாதுகாக்க மேற்கொண்ட முயற்சிகள் குறித்த அறிக்கையையும் உலக அரங்கில் விளக்கிக் காட்டவுள்ள திரு. ஜகதீஷ் அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Share This Article
Leave a review