கோவை காவல்துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு சைக்கிள் பேரணி

1 Min Read

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் தமிழகத்தில் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

100% போதை பொருட்களை தடுக்கும் விதமாக கோவை காவல் ஆணையர் சார்பில் சைக்கிள் பேரணி நடை பெற்றது .  தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பழக்கத்தினால் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .

கோவை மாநகரில் வருடத்திற்கு குறைந்த பட்சம் 30 லிருந்து 40 கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது . இதற்கு கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கத்தின் காரணமாகவே அதிகப்படியான கொலை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது .

அதனை தடுக்கும் விதமாக இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து சைக்கிள் பேரணி இன்று தொடங்கியது .

சைக்கிள் பேரணியில் போதைப் பொருள் தடுக்கும் வகையில் 16 வயது முதல் வயது முதியவர்கள் வரை பேரணியில் கலந்து கொண்டனர். சைக்கிள் பேரணியை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார் .

பின்னர் பொதுமக்களுடன் சேர்ந்து சைக்கிள் பேரணியில் கலந்து பயணம் செய்தார்.

பேரணியில் தன்னார்வலர்கள் இளைஞர்கள் என சுமார் 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணி காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து தொடங்கி டவுன் ஹால்,செட்டி வீதி, பேரூர், பச்சாபாளையம், ஆலந்துறை, மாதம்பட்டி, சாடி வயல் மற்றும், ஈசா யோகா சென்றது .

அதன் பின் அங்கிருந்து புறப்பட்டு அதே வழியாக வந்து இறுதியாக அவிநாசி சாலையில் உள்ள பி.ஆர்.எஸ் மைதானத்தில் நிறைவடைந்தது . முன்னதாக சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டவரகள் மைதானத்தில் 100% போதை பொருட்களை தடுக்கும் விதமாக உறுதி மொழி எடுத்து கொண்டனர் .

கோவை மாநகர ஆணையரின் இந்த முயற்சி பள்ளி கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அணைத்து இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .

Share This Article
Leave a review