பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை. அப்போது கணக்கில் வராத 1 லட்சத்து 40 ஆயிரத்தை ரூபாயை பறிமுதல் செய்து அதிகாரிகளிடம் விசாரணை.
பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலகத்தில் முறைகேடு சம்பவம் நடைபெறுவதாக கோவை மாவட்ட ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் இதனை அடுத்து ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் லதா மற்றும் ஷீலா தலைமையிலான அதிகாரிகள் பொள்ளாட்சி மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெறும் பணிகளை லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் நீண்ட நேரமாக கண்காணித்து வந்துள்ளனர்.

அப்போது இடைத்தரகர்கள் மற்றும் அலுவலக வளாகத்துக்குள் கடை நடத்தி வருபவர்கள் அலுவலகத்திற்குள் அடிக்கடி உள்ளே சென்று வருவதை கவனித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீரென அதிரடியாக விரைந்து சென்று அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனை ஆய்வு நடத்தினர். அப்போது கணக்கில் வராத ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த அதிகாரிகள், தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் மேலும் அலுவலகப் பணியாளர்கள், இடைத்தரகர்கள் மற்றும் அலுவலக வளாகத்திற்குள் வாடகைக்கு கடை நடத்தி வரும் தனியார் கடைகளான ஜெராக்ஸ், ஸ்டுடியோ மற்றும் டீக்கடை நடத்தி வருபவர்களை பிடித்து, ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது லஞ்சம் வாங்கிய பணத்தை பறிமுதல் செய்யப்பட்டுள்ள 1 ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு முறையான ஆவணங்கள் உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு, பின்னர் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இரவு 7 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த சோதனையானது தற்போது நள்ளிரவு வரை சோதனை நீடித்தது. மேலும் இந்த சோதனையானது முழுமையான விபரங்களை குறித்து, விசாரணை மேற்கொள்ள அதிகாலை வரை நடைபெறும் எனவும், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.