இந்திய பாட்மின்டன் அரங்கின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் அன்மோல்..!

2 Min Read

இந்திய பாட்மின்டன் அரங்கின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் அன்மோல். ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்ல கைகொடுத்தார். ஆசிய அணிகளுக்கான பாட்மின்டன் சாம்பியன்ஷிப் மலேசியாவில் நடந்தது.

- Advertisement -
Ad imageAd image

இதுவரை எவ்வித பதக்கமும் வெல்லாத இந்திய பெண்கள் அணி, முதல் போட்டியில் வலிமையான சீனாவை சந்தித்தது. முதல் 4 போட்டி முடிவில் இந்தியா 2-2 என சமனில் இருந்தது. ஐந்தாவது போட்டியில் (ஒற்றையர்) உலக தரவரிசையில் 472-வது இடத்தில் வகித்தார்.

இந்திய பாட்மின்டன் அரங்கின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் அன்மோல்

அப்போது 19 வயது பிரிவின் ‘நம்பர் -1 வீராங்கனை, இந்தியாவின் அன்மோல் கார்ப் (ஹரியானா) களமிறங்கினார். துணிச்சலாக போராடிய இவர், 22-10, 14-21, 21-18 என சீனாவின் ஊலுவை (149-வது இடம்) சாய்த்து வெற்றிக்கு கைகொடுத்தார். பின்னர் அரையிறுதியில் மீண்டும் இந்தியா 2-2 என சமனில் இருந்தது.

அப்போது கடைசி போட்டியில் களமிறங்கிய அன்மோல், உலக தரவரிசையில் 49-வது இடத்திலுள்ள ஜப்பானின் நட்சுகியை சாய்த்து, இந்தியாவை பைனலுக்கு கொண்டு சென்றார். அப்போது பைனலில் இந்தியா தாய்லாந்து மோதின. இரு அணிகள் தலா 2 வெற்றி பெற, மறுபடியும் ஸ்கோர் 2-2 என ஆனது.

அன்மோல்

அதனை தொடர்ந்து தங்கம் கொண்டு செல்லும் வெற்றியாளரை முடிவு செய்யும் கடைசி போட்டியில் அன்மோல் களமிறங்கினார். இந்த முறையும் அசத்தலாக செயல்பட்ட அன்மோல் 45-வது இடத்திலுள்ள பார்ன்பிச்சாவை (21-14, 21-9) வீழ்த்தினார்.

இதை அடுத்து ஆசிய அணிகளுக்கான பாட்மின்டனில் இந்தியா முதல் தங்கம் வென்றது. இளம் நட்சத்திரமான அன்மோல், செய்னா நேவலின் தீவிர ரசிகை. இவரை, இந்தியாவின் அடுத்த செய்னா என அழைக்கின்றனர். அன்மோல் கூறுகையில்;-

இந்திய பாட்மின்டன் அரங்கின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் அன்மோல்

செய்னா அதிக துணிச்சலுடன், தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடுவார். நானும், இவரும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள், அவரை போன்றே நானும் விளையாடுகிறேன். என்னை செய்னாவுடன் ஒப்பிடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, என்றார். இந்திய அணி பயிற்சியாளர் கோபிசந்த் கூறுகையில்;-

சீனா, ஜப்பான் என பல முன்னணி வீராங்கனைகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார் அன்மோல். அப்போது போட்டி சூழ்நிலையை விரைவாக புரிந்து கொண்டு, அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு விளையாடுகிறார். நாங்கள் கொடுத்த ‘டிப்சையும்’ மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறார்.

இந்திய பாட்மின்டன் அரங்கின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் அன்மோல்

இவரது இயற்கையான திறமை வியக்க வைக்கிறது என்றார். இந்திய அணி முன்னாள் பயிற்சியாளர் விமல் குமார் கூறுகையில்;- செய்னா நேவல், சிந்து என சீனியர்களுக்கு மாற்றாக இளம் வீராங்கனைகள் எழுச்சி பெற்றுள்ளது நன்றாகத் தெரிகிறது. அன்மோல் உட்பட பலர் சர்வதேச அரங்கில் ஜொலிக்கின்றனர்.

இன்னும் பலர் வருவர் என நம்புகிறேன். இவர்களால் இந்திய பாட்மின்டன் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது என்றார்.

Share This Article
Leave a review