லஞ்சம் வாங்கி கைதான வழக்கில் அங்கித்திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி..!

2 Min Read

திண்டுக்கல் அரசு மருத்துவரை மிரட்டி ரூபாய் 40 லட்சம் லஞ்சம் வாங்கி கைதான வழக்கில் ஜாமீன் கோரி அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கித்திவாரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

- Advertisement -
Ad imageAd image

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ் பாபு மீது உள்ள சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூபாய் 40 லட்சம் வாங்கிய மதுரை அமலாக்கத்துறை உதவி மண்டல அலுவலக ஆய்வாளர் அங்கித்திவாரி கடந்த 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்து உள்ளனர். அங்கித் திவாரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பலரை மிரட்டி வாங்கிய லஞ்சம் பணத்தில் உயர் அதிகாரிகளுக்கு பங்கு கொடுத்துள்ளதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

அங்கித்திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி

இதனால் அங்கித்திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்து உள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி திண்டுக்கல் தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று முன்தினம் அங்கித்திவாரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அங்கித்திவாரி தரப்பில் ஆஜரான வக்கீல் விவேக் பாரதி வாதிடுகையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது. எனவே மனுதாருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கூறினார். இதை எதிர்த்து அரசு தரப்பில் வாதாடிய வக்கீல் அனு ராதா சம்பந்தப்பட்ட குற்றவாளி நவீன தொழில்நுட்பம் மூலம் சம்பவ இடத்தில் கையும் களவுமாக ரூபாய் 20 லட்சம் லஞ்சப் பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் கோர்ட்

இந்த வழக்கு ஆரம்பகட்ட நிலையில் இருப்பதால் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார். வழக்கு விசாரணையின் போது ஊழல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்கள் பழனிச்சாமி, ரூபா கீதா, ராணி ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

Share This Article
Leave a review