தீர்த்தத்தில் மயக்க மருந்து – பிரபல நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த கோவில் பூசாரி..!

6 Min Read
பிரபல நடிகை தேவி

தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, கோயில் பூசாரி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக நடிகை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

சென்னை விருகம்பாக்கம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 30 வயது பெண் புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் குறித்து போலீசார் கூறியதாவது;-

கோவையை சேர்ந்தவர் தேவி. சின்ன வயதிலேயே பெற்றோரை இழந்தவர். எனவே உறவினர்கள் கட்டுப்பாட்டில் தேவி வளர்ந்து வந்துள்ளார். இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்கிறார். சினிமா நடிகையாக வலம் வர வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.

பிரபல நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த கோவில் பூசாரி

இதற்காக, கடந்த 2021-ல் சென்னை சாலிகிராமம் காந்தி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலை தேடினார். ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வேலை கிடைத்தது. பிறகு சில படங்களிலும் நடித்தார்.

தேவிக்கு கடவுள் பக்தி அதிகம் உண்டு. எனவே, பாரிமுனையில் உள்ள அந்த பிரபலமான அம்மன் கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.

அப்படித்தான், ஒரு நாள் கோயிலுக்கு போன போது, பக்தர்கள் வரிசையில் தேவி நின்றிருந்த போது, அங்கிருந்த குருக்கள் கார்த்திக் என்பவர், தேவியிடம், “உங்களை எங்கியோ பார்த்தது போல் இருக்கிறதே? என்று கேட்டிருக்கிறார்.

தீர்த்தத்தில் மயக்க மருந்து – பிரபல நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த கோவில் பூசாரி

அதற்கு தேவியும், நான் டிவியில் வேலை பார்ப்பதால், என்னை அடிக்கடி டிவியில் பார்த்திருப்பீர்கள் என்று தெரிவித்துள்ளார். பிறகு, அந்த குருக்கள், தேவியை கோயில் கருவறைக்குள்ளேயே அழைத்து சென்று அம்பாளுக்கு அபிஷேகம் செய்துள்ளார்.

அப்போது தேவியிடம், குருக்கள் தன்னுடைய பெயர் கார்த்திக் முனுசாமி என்று சொல்லி, தேவியின் போன் நம்பரை வாங்கி கொண்டார்.

பிறகு தேவியின் வாட்ஸ்அப்புக்கு, சொற்பொழிவுகளையும், கோயிலில் நடக்கும் நிகழ்ச்சிகளையும் அடிக்கடி குருக்கள் கார்த்திக் அனுப்பி வந்த நிலையில், அடிக்கடி 2 பேரும் போனில் பேசி வந்திருக்கிறார்கள்.

ஒருநாள் அந்த கோயிலுக்கு சென்ற போது, தேவியை கோயில் குருக்களான கார்த்திக் முனுசாமி, உங்கள் வீட்டின் வழியாகத்தான் செல்கிறேன், உங்களை வீட்டில் விட்டு விட்டு செல்கிறேன் என்று தன்னுடைய பென்ஸ் காரில் தேவியை அழைத்து சென்றிருக்கிறார்.

வேறு வழியின்றி கார்த்திக்கை கல்யாணம் செய்ய ஒப்புக்கொண்டார் தேவி

வீட்டிற்கு வந்து காரில் இறங்கியதும், இவ்வளவு தூரம் வந்துட்டேன், வீட்டிற்குள் கூப்பிட மாட்டீங்களா? என்று தேவியிடம் கார்த்திக் கேட்டுள்ளார். உடனே தேவியும், உள்ளே வாங்க என்று சொல்லி கார்த்திக்கை வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார்.

அப்போது குருக்கள் கார்த்திக் முனுசாமி “அம்பாளுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம்” என்று தேவியிடம் தந்து குடிக்க சொல்லி உள்ளார். அந்த தீர்த்தத்தை தேவியும் வாங்கி குடித்துள்ளார். கொஞ்ச நேரத்தில் தேவிக்கு மயக்கம் வந்துள்ளது.

பிறகு வீட்டின் பெட்ரூமுக்கு அழைத்து சென்று, தேவியின் ஆடைகளை களைந்து உல்லாசமாக இருந்து விட்டு கார்த்திக் சென்று விட்டார். சில மணி நேரம் கழித்து தேவி கண் விழித்து பார்த்த போது, படுக்கை அறையில் நிர்வாணமான நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உல்லாசமாக போட்டோக்கள், வீடியோக்கள்

உடனே கார்த்திக்குக்கு போன் செய்து இதை பற்றி கேட்டுள்ளார். அதற்கு கார்த்திக், நேரடியாக கிளம்பி தேவி வீட்டிற்கு வந்துவிட்டார்.. “உன் அழகில் மயங்கி நான் இப்படி தவறு செய்து விட்டேன், என்னை மன்னித்துவிடு.

என் மனைவியுடன் எனக்கு தாம்பத்திய உறவு இல்லை, உன்னுடைய ஜாதகமும், என்னுடைய ஜாதகமும் ஒன்று சேர்ந்தால் பலனளிக்கும், நாம் 2 பேரும் கல்யாணம் செய்து சந்தோஷமாக இருக்கலாம்” என்று சொல்லி காலில் விழுந்து கதறி அழுதுள்ளார்.

பெற்றோர் இல்லாமல் உறவினரிடம் வளர்ந்த தேவி, வேறு வழியின்றி கார்த்திக்கை கல்யாணம் செய்ய ஒப்புக்கொண்டார். அதன் பிறகு, தேவியின் வீட்டிற்கு குருக்கள் கார்த்திக் அடிக்கடி வந்து ஜாலியாக இருந்து வந்துள்ளார்.

மிரட்டல் விடுத்தார் கார்த்திக்

இதனால் தேவி கர்ப்பமானார். பிறகு கார்த்திக், காளிகாம்பாள் கோயிலில் தாலி என்று சொல்லி, தேவியை வீட்டிலேயே வைத்து கல்யாணம் செய்து கொண்டார். அப்போது முதல் 2 பேரும் தம்பதி போல வாழ்ந்து வந்தனர்.

தேவி கர்ப்பமாக இருந்ததால், அது ஜாதகப்படி சரியில்லை என்று சொல்லி, கடந்த 25.2.2023 அன்று வடபழனியில் ஒரு தனியார் மருத்துவமனையில் அபார்ஷன் செய்ய வைத்துள்ளார்.

பிறகு ஒருநாள், தன்னுடைய விஐபி நண்பர் என்று சொல்லி, தேவி வீட்டிற்கு ஒருவரை காரில் அழைத்து வந்துள்ளார். பிறகு ஒரு அவசர வேலை இருக்கிறது, நான் வரும் வரை என்னுடைய விஐபி நண்பருடன் பேசி கொண்டு இரு என்று சொல்லி கார்த்திக் அங்கிருந்து கிளம்பி விட்டார்.

பிரபல நடிகை தேவி

சிறிது நேரத்தில் அந்த விஐபி நபர், தேவிக்கு பாலியல் தொல்லை தந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த தேவி, கார்த்திக்குக்கு போனை போட்டு நடந்த சம்பவத்தை சொல்லவும், இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அசிங்கம் என்று சொல்லி தேவியை சமாதானம் செய்துள்ளார்.

ஆனால், அடுத்த நாளே, “என்னுடைய விஐபி நண்பருடன் நீ இணக்கமாக போயிருந்தால் எனக்கு எவ்வளவு பணம் கிடைத்திருக்கும் தெரியுமா?” என்று சொல்லி தேவியை சரமாரி அடித்து வந்துள்ளார்.

இப்படிப்பட்ட சூழலில், ஒருநாள், கார்த்திக்கின் செல்போனை எடுத்து தேவி பார்த்த போது, பல பெண்களுடன் கார்த்திக் உல்லாசமாக இருந்த போட்டோக்கள், வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

தேவியை பாலியல் தொழிலில் தள்ள முயற்சித்துள்ளார் கார்த்திக்

தன்னுடைய போட்டோக்களை நிறைய நண்பர்களுக்கு அனுப்பி இருந்ததை பார்த்து தேவி அதிர்ந்து போனார். இதுகுறித்து கார்த்திக்கிடம் கேட்டதற்கு, தேவியை கடுமையாக தாக்கி விட்டு செல்போனை நொறுக்கி விட்டு வெளியே சென்றுவிட்டார்.

இதனால் மனமுடைந்த தேவி, அதே பாரிமுனை கோயிலுக்கு சென்று, இன்னொரு குருக்களான காளிதாஸ் என்பவரிடம் சொல்லி முறையிட்டுள்ளார். அதற்கு அவர், “கார்த்திக் என்னுடைய அண்ணன் மகன் தான்.

அவன் எப்போதும் இப்படித்தான். அவனுடன் நீ ஒன்றாக இருந்ததற்கு எவ்வளவு பணம் வேண்டும்? என்று கேட்டுள்ளார். இதைக்கேட்டு மேலும் அதிர்ச்சியடைந்தார் தேவி. இப்படிப்பட்ட சூழலில், கார்த்திக்கின் கள்ளக்காதலி சுவேதா என்பவர் சந்தித்து பேசியிருக்கிறார்.

காவல் நிலையத்தில் புகார்

என்னுடன் வந்து விட்டால், சென்னையில் உனக்கு சம்பாதிக்க வழி செய்கிறேன்” என்று சொல்லி பாலியல் தொழிலில் தள்ள முயற்சித்துள்ளார்.

இதனால் மேலும் மனமுடைந்த தேவி, கார்த்திக்கின் மனைவி பிரியாவிடம் சென்று நடந்ததையெல்லாம் சொல்லி அழுதுள்ளார். இதைக்கேட்ட பிரியா, என் கணவர் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது, போலீசுக்கும் போகக்கூடாது” என்று ஆட்களை வைத்து மிரட்டியிருக்கிறார்.

இதற்கு பிறகுதான், உயிருக்கு பயந்து போன தேவி, உரிய ஆதாரங்களுடன் இணை கமிஷனரிடம் நேரில் வந்து புகார் அளித்திருக்கிறார்.

கார்த்திக் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

இறுதியில், தேவி அளித்த புகாரின் அடிப்படையில், விருகம்பாக்கம் மகளிர் போலீசாரும் விசாரணை நடத்திநார்கள்.

அதில், கோயில் குருக்கள் கார்த்திக், தேவியை போலவே பல பெண்களுடன் ஒன்றாக இருந்த போட்டோக்கள், வீடியோக்கள் எடுத்து மிரட்டியது உறுதியாகியிருக்கிறது.

இதை அடுத்து, கார்த்திக் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் கார்த்திக்கிடம் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article
Leave a review