நிகோபார் தீவு அருகே சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 4.1 ஆக பதிவானது. பின்னர் 3வது முறையாக நிகோபார் தீவு அருகே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5 .3 ஆக பதிவானது.
அந்தமான் நிகோபார் தீவில் உள்ள கேம்ப் பெல் பே என்ற பகுதியின் வடக்கு பகுதியில் கடலுக்கு அடியில் நேற்று பகல் 1.15 மணியளவில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 4 .9 ஆக பதிவானது.

இதைத் தொடர்ந்து மதியம் 2.59 மணி அளவில் நிகோபார் தீவு அருகே சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 4.1 ஆக பதிவானது. பின்னர் 3வது முறையாக நிகோபார் தீவு அருகே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5 .3 ஆக பதிவானது.
இதனைத் தொடர்ந்து 4வது முறையாக நிகோபார் தீவில் கடலுக்கு அடியில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5.5 ஆக பதிவானது. இதன் பிறகு இரவு கடலுக்கு அடியில் தொடர்ந்து 4 முறையாக நில அதிர்வு ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு இல்லை என, புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் நேற்று இரவு ஏற்பட்ட நில அதிர்வுதான் அதிக வலுவான நில அதிர்வு என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் ஒரு நில அதிர்வு ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து மீண்டும் ஒன்றரை மணி நேர இடைவெளியில் 2.30 மணிக்கு மற்றொரு நில அதிர்வு ஏற்பட்டு உள்ளது. பாதிப்பு பெரிய அளவில் இல்லாவிட்டாலும் அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதற்கிடையே ‘அடுத்தடுத்து நில அதிர்வுக்கு காரணம் என்ன? மீண்டும் நில அதிர்வுகள் ஏற்படுமா?’ என மத்திய அரசு ஆய்வு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.