கூரியர் நிறுவனத்தில் ரூபாய் 2 லட்சம் திருடிய ஊழியர் கைது..!

2 Min Read

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூரியர் நிறுவனத்தில் ரூபாய் 2 லட்சம் திருடிய ஊழியர் என்பவரை போலிசார் கைது செய்தனர். பின்னர் போலிசார் விசாராணை.

- Advertisement -
Ad imageAd image

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் தாலுக்கா மேலப்பழங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் தருமன். இவரது மகன் தசரதராமன் வயது 28. இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட அருகே நீளம் மங்கலம் கூட்ரோடு பகுதியில் இயங்கி வரும் தனியார் கூரியர் நிறுவனத்தில் கடந்த 8 மாதங்களாக பணி ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

தசரதராமன்

இவருடன் சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சார்வாய் கிராமத்தை சேர்ந்த முருகேசன். இவரது மகன் அரவிந்த் வயது 27, என்பவரும் கூரியர் நிறுவனத்தில் இவருடன் சேர்ந்து பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி தனியார் கூரியர் நிறுவனத்தில் பணி செய்யும் ஊழியரிடம் கலெக்‌ஷன் வசூல் செய்து விட்டு வா என்று சொல்லி, அந்த ஊழியரிடம் கலெக்சன் ஆன ரூபாய் இரண்டு லட்சத்து 2 ஆயிரத்து 195 ரூபாய் கலெக்‌ஷன் வசூல் செய்த தசரதராமன் தனியார் கூரியர் நிறுவனத்தில் உள்ள லாக்கரில் வைத்ததாக தெரிகிறது.

பின்னர் மறுநாள் தனியார் கூரியர் நிறுவனத்தில் பணி செய்ய வந்த தசரதராமன் நிறுவனத்தில் யாரும் இல்லாத நேரத்தில் அதை தசரதராமன் கூரியர் நிறுவனத்தில் உள்ள ஒரு லாக்கரை திறந்து கலெக்‌ஷன் வசூல் செய்த பணத்தை ஊழியர்கள் இல்லாத நேரத்தில் திருடி சென்றார். இதனை அறிந்த தனியார் கூரியர் நிறுவனம் வேலை செய்யும் பணியளர்களை விசாரித்தனர். பின்னர் தசரதராமன் திருடி சென்றது, சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

கூரியர் நிறுவனத்தில் ரூபாய் 2 லட்சம் திருடிய ஊழியர் கைது

பின்னர் இது குறித்து அரவிந்த் கூறியர் நிறுவன ஆய்வாளர்களிடம் மறுநாள் நிறுவனத்தில் யாரும் இல்லாத நேரத்தில் அதை தசரதராமன் திருடி சென்றதாக கூறினார். இதை கண்ட அரவிந்த் தசரதராமன் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் நிலயத்தில் புகார் அளித்தார். அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலிசார், தசரத ராமன் மீது வழக்கு பதிவு செய்தனர். கள்ளாக்குறிச்சி மாவட்ட போலிசார் அவரை தேடி பிடித்து, கைது செய்தனர். பின்னர் தசரதராமனை போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article
Leave a review