திமுகவின் முக்கிய பொறுப்புகளில் வன்னியர் சமூகத்தினர் தான் இருக்கிறார்கள் என்று தின்னை பிரச்சாரத்தில் ஈடுபட்டு, உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரிக்க வேண்டும். விக்கிரவாண்டி நடந்த இளைஞர் அணி கூட்டத்தில் பொன்முடி பேச்சு.
விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவான திமுகவைச் சேர்ந்த புகழேந்தி உடல் நலக்குறைவால் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

விக்கிரவாண்டி தொகுதி திமுக இளைஞரணி செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் கௌதம சிகாமணி கலந்து கொண்டார். அப்போது பேசிய பொன்முடி;-
தமிழக முதல்வர் அறிவித்த மகளிர் உரிமைத்தொகை இலவச பஸ் பயணம் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து மக்களிடையே வீடு வீடாக சென்று என்னை பிரச்சாரத்தில் ஈடுபட்டு உதயசூரியின் சின்னத்திற்கு ஓட்டு சேகரிக்க வேண்டும் என்றார்.

அதேபோன்று திமுகவின் வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு தான் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது திமுக வன்னியர்களுக்கு எதிரான கட்சி இல்லை என்று மக்களிடம் புரிய வையுங்கள் என்று பேசினார்