தமிழகத்தில் 16 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் காஞ்சிபுரம், விழுப்புரம் உட்பட 8 மாவட்ட எஸ்.பி.க்கள் உட்பட மொத்தம் 48 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் அமுதா நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது ;
தமிழகத்தில் சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றத்தடுப்பு பிரிவு ஐ.ஜியாக இருந்த தமிழ்சந்திரனுக்கு அதேபதவியில் கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு-1 எஸ்.பி.யாக இருந்த ஜெயரூக்கு பதவி உயர்வு வழங்கி செயலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாகவும், சென்னை காவல்துறை இயக்குநர் அலுவலகம் தலைமையிட டி.ஐ.ஜி.யாக இருந்த சாமுண்டீஸ்வரி சென்னை,சமூகநீதி மற்றும் மனித உரிமை ஐ.ஜி.யாகவும், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த லட்சுமிக்கு பதவி உயர்வு வழங்கி ஆயுதப்படை தலைமையிட ஐ.ஜி.யாகவும், சேலம் சரக டி.ஐ.ஜி.யாக இருந்த ராஜேஸ்வரிக்கு, ஐ.ஜி.யாக பதவி உயர்வு வழங்கப்பட்டு சீருடைப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினராகவும், சென்னை சி.ஐ.டி உளவுத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ராஜேந்திரன் ஆவடி மாநகர தலைமையிடம் மற்றும் போக்குவரத்து கூடுதல் கமிஷனராகவும், வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக இருந்த எம்.எஸ். முத்துசாமிக்கு ஐ.ஜி.யாக பதவி உயர்வு வழங்கி வண்டலூர், ஊனமஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமி கூடுதல் இயக்குநராகவும், சென்னை மாநகர தெற்கு போக்குவரத்து இணை கமிஷனராக இருந்த மயில்வாகனன் சென்னை அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாகவும், சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய உதவி ஐ.ஜி.யாக இருந்த வெண்மதி சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாகவும், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.யாக இருந்த சரோஜ்குமார் தாக்கூர், வேலூர் சரக டி.ஐ.ஜி.யாகவும், சென்னை மாநகர தெற்கு போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த மகேஷ்குமார் சென்னை மாநகர தெற்கு போக்குவரத்து இணை கமிஷனராகவும், சென்னை சைபர் கிரைம் எஸ்.பி.யாக இருந்த தேவராணி சென்னை மாநகர வடக்கு போக்குவரத்து இணை கமிஷனராகவும், காவல்துறை இயக்குநர் அலுவலகம் தலைமையிட உதவி ஐ.ஜி.யாக இருந்த உமா, சேலம் சரக டி.ஐ.ஜி.யாகவும், சென்னை பாதுகாப்பு பிரிவு சி.ஐ.டி எஸ்.பி.யாக இருந்த திருநாவுக்கரசு, சென்னை பாதுகாப்பு நுண்ணறிவுப்பிரிவு டி.ஐ.ஜி.யாகவும், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி 7-வது பட்டாலியன் கமாண்டன்டாக இருந்த ஜெயந்தி, சென்னை கடலோர பாதுகாப்பு குழுமம் டி.ஐ.ஜி.யாகவும், ஆவடி 5-வது பட்டாலியன் கமண்டன்டாக இருந்த ராமர் சென்னை ரயில்வே டி.ஐ.ஜி.யாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறை அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த ராதிகா, சென்னை குற்றப்பிரிவு ஐ.ஜி.யாகவும், சென்னை ஆயுதப்படை ஐ.ஜி.யாக இருந்த ஜெயகவுரி சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி ஐ.ஜி.யாகவும், சமூக நீதி மற்றும் மனித உரிமை ஐ.ஜி.யாக இருந்த ரூபேஷ் குமார் மீனா இயக்குநர் அலுவலகம் காவல்துறை விரிவாக்கம் பிரிவு ஐ.ஜி.யாகவும், திருநெல்வேலி போலீஸ் கமிஷனராக இருந்த மகேஸ்வரி தாம்பரம் மாநகர தலைமையிட மற்றும் போக்குவரத்து கூடுதல் கமிஷனராகவும், ஆவடி மாநகர சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராக இருந்த விஜயகுமார் சென்னை மாநகர மேற்கு மண்டல இணை கமிஷனராகவும், தொழில்நுட்பபிரிவு டி.ஐ.ஜி.யாக இருந்த திஷா மிட்டல் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாகவும், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாக இருந்த ஜியாவுல் ஹக், தஞ்சை சரக டி.ஐ.ஜி.யாகவும், தஞ்சை சரக டி.ஐ.ஜி.யாக இருந்த ஜெயச்சந்திரன் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை துணை இயக்குநராகவும், சென்னை மாநகர மேற்கு மண்டல இணை கமிஷனராக இருந்த மனோகர் திருச்சி சரக டி.ஐ.ஜியாகவும், திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக இருந்த பகலவன் சென்னை சி.ஐ.டி நுண்ணறிவுப்பிரிவு டி.ஐ.ஜி.யாகவும், தாம்பரம் மாநகர சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராக இருந்த மூர்த்தி திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் பதவி டி.ஐ.ஜி.யாக தரம் குறைத்து கமிஷனராக அமர்த்தப்பட்டுள்ளார். அதேபோல், சென்னை காவல்துறை விரிவாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த மல்லிகா, காவல்துறை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவுக்கும், சென்னை பாதுகாப்பு நுண்ணறிவுப்பிரிவு டி.ஐ.ஜி.யாக இருந்த மகேஷ் சென்னை உள்நாட்டு பாதுகாப்பு நுண்ணறிவுப்பிரிவு டி.ஐ.ஜி.யாகவும், சிவில் சப்ளை சி.ஐ.டி எஸ்.பி.யாக இருந்த கீதா திருநெல்வேலி நகர மேற்கு துணை கமிஷனராகவும், திருநெல்வேலி நகர மேற்கு துணை கமிஷனராக இருந்த சரவணகுமார் கோவை நகர தெற்கு துணை கமிஷனராகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

கோவை நகர தெற்கு துணை கமிஷனராக இருந்த சண்முகம் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.யாகவும், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.யாக இருந்த சுதாகர் சென்னை மாநகர பரங்கிமலை துணை கமிஷனராகவும், சென்னை மாநகர பரங்கிமலை துணை கமிஷனராக இருந்த தீபக் சிவாச் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யாகவும், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யாக இருந்த சஷாங்க் சாய் சென்னை கியூ பிரிவு சி.ஐ.டி எஸ்.பி.யாகவும், சென்னை கியூ பிரிவு எஸ்.பி.யாக இருந்த சசிமோகன் கோவை புதிதாக உருவாக்கப்பட்ட பங்கரவாத எதிர்ப்புப்படை எஸ்.பி.யாகவும், வண்டலூர் ஊனமாஞ்சேரி தமிழ்நாடு போலீஸ் அகாடமி நிர்வாக பிரிவு துணை இயக்குநராக இருந்த செல்வராஜ் அரியலூர் மாவட்ட எஸ்.பி.யாகவும், அரியலூர் மாவட்ட எஸ்.பி.யாக இருந்த பெரோஸ்கான் அப்துல்லா விருதுநகர் மாவட்ட எஸ்.பி.யாகவும், கோவை நகர வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக இருந்த சந்தீஷ் ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.யாகவும், ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.யாக இருந்த தங்கதுரை கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.யாகவும், மதுரை மாவட்ட எஸ்.பி.யாக இருந்த சிவபிரசாத் தேனி மாவட்ட எஸ்.பி.யாகவும், தேனி மாவட்ட எஸ்.பி.யாக இருந்த டொங்கரே பிரவின் உமேஷ் மதுரை மாவட்ட எஸ்.பி.யாகவும், சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக இருந்த சிங்ஷ்லிங் சென்னை மத்திய மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.யாகவும், திருநெல்வேலி நகர தலைமையிட துணை கமிஷனராக இருந்த அனிதா மதுரை நகர வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராகவும், மதுரை நகர வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக இருந்த புக்யா சினேக பிரியா சென்னை புதிதாக உருவாக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு படை எஸ்.பி.யாகவும், சென்னை தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.யாக இருந்த மெகலினாஐடன் சென்னை தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் எஸ்.பி.யாகவும், சென்னை தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் எஸ்.பி.யாக இருந்த பாண்டி கங்காதர் சென்னை மாநகர தெற்கு போக்குவரத்து துணை கமிஷனராகவும், காவல்துறை இயக்குநர் அலுவலகம் காவலர் நலன் எஸ்.பி.யாக இருந்த ராமகிருஷ்ணன் சென்னை மண்டல சிவில் சப்ளை சி.ஐ.டி எஸ்.பி.யாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.