தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படையினர் அதிரடி சோதனை..!

7 Min Read
தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படையினர் அதிரடி சோதனை

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் 702 பறக்கு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.2 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று முன்தினம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படையினர் அதிரடி சோதனை

அப்போது தேர்தல் தேதி அறிவித்த அடுத்த நொடியில் இருந்து தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதை அடுத்து மாநில தேர்தல் ஆணையர் சத்யா பிரதா சாகு உத்தரவுப்படி தமிழ்நாடு முழுவதும் சென்னை உட்பட 38 மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலை 3 மணி முதல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

பின்பு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றை தடுக்க 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கடந்த 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை அதாவது தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே நாடு முழுவதிலும் இருந்து 25 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து முகாமிட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படையினர் அதிரடி சோதனை

அவர்கள் தற்போது மாநிலம் முழுவதும் தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு பறக்கும் படையில் இன்ஸ்பெக்டர் தலைமையில் எஸ்ஐக்கள், காவலர்கள் மற்றும் 3 துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் புகைப்படம் மற்றும் வீடியோ கலைஞர்களுடன் 10 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படையினர் அதிரடி சோதனை

குறிப்பாக தமிழ்நாடு மாநில எல்லைகளான புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில எல்லைகளில் சோதனை சவாடிகள் அமைத்து, வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்குள் வரும் ஆம்னி பேருந்துகள், கார்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள், அதேபோல், தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கின்றனர்.

மேலும், மாவட்ட எல்லைகளில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற பெரும் மாநகரங்கள் மற்றும் நகரங்களை இணைக்கும் பகுதிகளிலும் பறக்கும் படைகள் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படையினர் அதிரடி சோதனை

இந்த சோதனையின் போது, ரூ.1 லட்சத்திற்கு மேல் பணம் மற்றும் நகைகள், பொருட்கள், அலங்கார பொருட்கள் எடுத்து சென்றால், சம்பந்தப்பட்ட பணம் மற்றும் நகைகள், பொருட்களுக்கு ஆவணங்கள் வைத்திருப்பது அவசியம்.

பின்னர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்திற்கு மேல் பணம் அல்லது நகைகள் மற்றும் பொருட்கள் எடுத்து சென்றால், பறக்கும் படைகள் வீடியோ பதிவுடன் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படையினர் அதிரடி சோதனை

அப்போது ரூ.10 லட்சத்திற்கு மேல் பணம் பிடிபட்டால் உடனே பறக்கும் படை சார்பில் வருமான வரித்துறைக்கு தகவல் அளித்து அவர்களிடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்படும்.

அந்த வகையில், இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தல் அறிவித்த நேரத்தில் இருந்து நேற்று வரை அதாவது 2 நாட்களில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.2 கோடி வரை ரொக்க பணம் பறக்கும் படைகள் மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படையினர் அதிரடி சோதனை

குறிப்பாக, அதிகபட்சமாக சென்னையில் மத்திய சென்னை, வட சென்னை, தென்சென்னை என 3 நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தின் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

வட சென்னை தொகுதிக்கு உட்பட்ட சவுகார்பேட்டை துளசிங்கம் தெருவில் சந்தேகப்படும் படியாக நின்றிருந்தவர்களை போலீசார் பிடித்து சோதனை செய்த போது, அவர்கள் வைத்திருந்த பையில் கட்டுக்கட்டாக ரூ.1.42 கோடி ரொக்க பணம் இருந்தது.

தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படையினர் அதிரடி சோதனை

அதற்கான ஆவணங்கள் இல்லாதால் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

அப்போது பணத்தை கொண்டு வந்த கோவிந்தப்பன் நாயக்கன் தெருவை சேர்ந்த குணா ஜெயின் வயது (32), தர்ஷன் வயது (22), மண்ணடி சைவ முத்தையா தெருவை சேர்ந்த யாசர் அராபத் வயது (47) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படையினர் அதிரடி சோதனை

அதேபோல் நகைக்கடைகள் அதிகம் உள்ள சவுகார்பேட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை சோதனை செய்த போது, சுஜன் ராம் (எ) சுரேஷ் வயது (24) என்பவர் உரிய ஆவணமின்றி ரூ.10.50 லட்சம் ரொக்கம் கொண்டு வந்தது தெரியவந்தது.

தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படையினர் அதிரடி சோதனை

அதையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஈரோடு நசியனூர் சாலையில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், குமலன்குட்டையில் இருந்து காரில் சென்ற டயர் வியாபாரி சசியிடம் ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ.2.37 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு, சூரம்பட்டி பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் வடிவேல் வயது (39) என்பர் ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே கள்ளிக்கோட்டை சாலை மரப்பாலம் பகுதியில் கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு தேங்காய் லோடு ஏற்றி வந்த லாரியை வழி மறித்து பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படையினர் அதிரடி சோதனை

அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.11.85 லட்சம் இருந்தது. அதை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர். ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே பறக்கும் படை அதிகாரி ராகுல் தலைமையில் நடந்த வாகன சோதனையில், காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 89 பட்டுப்புடவைகள் பறிமுதல் செய்தனர்.

அவற்றை எடுத்து வந்த கர்நாடகா மாநிலம், ஷிமோகா அருகே கே.சி. புரத்தை சேர்ந்த விஜயேந்திரராவ் வயது (61), அவரது மனைவி வித்யாவதியிடம் விசாரணை நடக்கிறது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த வேப்பூர் அருகே அடரி பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் சேலம் சென்ற லாரியில் கணக்கில் வராத 2 லட்சத்து 51 ஆயிரத்து 950 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படையினர் அதிரடி சோதனை

நாகப்பட்டினம் அருகே ஷேசமூலை பகுதியில் நடந்த சோதனையில், செல்போன் கடை உரிமையாளர் ரகுராமன் பைக்கில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.99 ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்யப்பட்டது. மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் சென்ற ஒரு காரை நிறுத்தி சண்முகசுந்தரம் என்பவர் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1.30 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் செம்பனார்கோயில் அருகே ஆக்கூர் முக்கூட்டில் சென்னையில் இருந்து காரைக்கால் சென்ற ஒரு காரில் ரூ.1.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மருதூர் சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு சரக்கு வாகனத்தில் மணப்பாறையை சேர்ந்த தர்மலிங்கம், சுரேஷ்குமார் ஆகியோர் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1,03,500 பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படையினர் அதிரடி சோதனை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, அடைக்கம்பட்டி சோதனை சாவடி அருகே நடந்த சோதனையில் டாட்டா ஏசி மினி வேனில் குத்துவிளக்கு, குக்கர், தோசைக்கல், எண்ணெய்சட்டி மற்றும் வடைசட்டி அடங்கிய 71 அட்டை பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் நடந்த வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி விஜயன் வயது (41) என்ற முட்டை வியாபாரியிடம் ரூ.2 லட்சத்து 1,900 பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வகையில் மாநிலம் முழுவதும் 2 நாட்களில் சென்னை உட்பட 38 மாவட்டங்களில் ரூ.2 கோடி ரொக்க பணம் மற்றும் பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share This Article
Leave a review