இந்திய தேர்தல் ஆணையம் 2024 மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை கடந்த மாதம் வெளியிட்டது.
அதன்படி, ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அனைத்து கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் வருகின்ற 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வானூர், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, ஆகாசம்பட்டு போன்ற பல்வேறு பகுதிகளில் விழுப்புரம் அதிமுக வேட்பாளர் பாக்யராஜ்-யை ஆதரித்து வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி பல்வேறு பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்.

அப்பொழுது வானூர் பகுதியில் பள்ளிக்கு செல்ல காத்திருந்த மாணவிகளிடம் அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட லேப்டாப், மிதிவண்டி, ஆகிய திட்டங்களை பற்றி கூறி தனது பெற்றோர்களிடம் சொல்லி பெற்றோர்களிடம் கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வாக்குகள் சேகரித்தார்.

அதில் ஜெயலலிதாவை போல பெண் ஒருவர் பேசி வாக்கு சேகரித்த சம்பவம் பொதுமக்களை கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.