அதிமுக – தேமுதிக கூட்டணி உறுதி – 2வது கட்ட பேச்சுவார்த்தை நிறைவு..!

4 Min Read
அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதி - 2வது கட்ட பேச்சுவார்த்தை நிறைவு

லோக்சபா தேர்தலில் தொகுதிப்பங்கீடு தொடர்பாக அதிமுக – தேமுதிக இடையே இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து கூட்டணி உறுதியாகி உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

மேலும் 4 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றிய பேச்சு நடந்து வருவதாகவும் தேமுதிக அவைத்தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி உள்ளன.

அதிமுக – தேமுதிக கூட்டணி உறுதி – 2வது கட்ட பேச்சுவார்த்தை நிறைவு

பிரதான கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய 3 கட்சிகளும் தீவிரமாக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளை தங்கள் கூட்டணிக்கு கொண்டு வர அதிமுகவும், பாஜகவும் தீவிரமாக முயன்றன. இந்த ரேஸில் அதிமுக முந்தியுள்ளது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக உடன் கூட்டணி அமைத்து 4 இடங்களில் போட்டியிட்டது தேமுதிக. தற்போது, அதிமுக கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளும், 1 மாநிலங்களவை பதவியும் தேமுதிக கேட்பதாகக் கூறப்படுகிறது.

அதிமுக – தேமுதிக

தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்க அதிமுக மறுப்பு தெரிவித்துள்ளது.

எனவே மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பதிலாக, மதுரை தொகுதியை கூடுதலாக ஒதுக்க தேமுதிக வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. தேமுதிக சார்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குழு ஒன்றை அமைத்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.

அதிமுக – தேமுதிக கூட்டணி உறுதி – 2வது கட்ட பேச்சுவார்த்தை நிறைவு

இந்த குழுவில் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், அவைத் தலைவர் டாக்டர்.வி.இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் மற்றும் துணை செயலாளர் பார்த்தசாரதி ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.

அதிமுக சார்பில் தேமுதிக கட்சியுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்று வருகிறது.

அதிமுக – தேமுதிக கூட்டணி உறுதி – 2வது கட்ட பேச்சுவார்த்தை நிறைவு

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கேபி முனுசாமி, எஸ்பி வேலுமணி, தங்கமணி, பெஞ்சமின் ஆகியோர் தேமுதிக உடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றனர்.

அதேபோல, தேமுதிக சார்பில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவினரான டாக்டர்.வி.இளங்கோவன், அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி ஆகியோரும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தனர்.

அதிமுக – தேமுதிக கூட்டணி உறுதி – 2வது கட்ட பேச்சுவார்த்தை நிறைவு

இதை தொடர்ந்து, அதிமுக – தேமுதிக இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இன்றைய இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்தெந்த தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்க வேண்டும்.

தேமுதிக குழுவினர் அதிமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தொகுதிகளை உறுதி செய்வார்கள் எனத் தெரிகிறது. எந்தெந்த தொகுதி என்பதும் அடையாளம் காணப்படும் எனத் தெரிகிறது.

அதிமுக – தேமுதிக கூட்டணி உறுதி – 2வது கட்ட பேச்சுவார்த்தை நிறைவு

லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடசென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய 4 தொகுதிகளை தேமுதிகவுக்கு ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேசமயம், தேமுதிக, வடசென்னை தொகுதிக்கு பதிலாக மதுரை அல்லது விழுப்புரம் அல்லது கடலூர் ஆகிய தொகுதிகளில் ஒன்றை கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக – தேமுதிக கூட்டணி உறுதி – 2வது கட்ட பேச்சுவார்த்தை நிறைவு

கடந்த லோக்சபா தேர்தலில் வடசென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய 4 தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக குழுவினர்;-

அதிமுகவுடன் நடந்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. நாங்கள் சில கருத்துகளை கூறினோம். அவர்களும் சில விஷயங்களை தெரிவித்தனர். நல்ல உறவோடு நட்புணர்வோடு பேசிக்கொண்டோம்.

அதிமுக – தேமுதிக கூட்டணி உறுதி – 2வது கட்ட பேச்சுவார்த்தை நிறைவு

கூட்டணி அமைப்போம் என உறுதி செய்து வெற்றிக் கூட்டணியாக இது அமையும் என பரஸ்பரம் பேசிக்கொண்டோம். எத்தனை தொகுதிகள் என்ற கட்டத்திற்கு இன்னும் வரவில்லை.

இன்று பேச்சுவார்த்தையில் பகிர்ந்து கொண்ட விஷயங்களை பிரேமலதா விஜயகாந்திடம் தெரிவிப்போம். மேற்கொண்டு அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும், அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளனர்.

Share This Article
Leave a review