பெற்றோரை வெட்டி கொலை செய்து விட்டு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை..!

2 Min Read

மூணாறு, தொடுப்புழா அருகே தாய் தந்தையை வெட்டி கொலை செய்து விட்டு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

- Advertisement -
Ad imageAd image

கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் அருகே உள்ள மூலமட்டம் பகுதியை சேர்ந்தவர் குமரன் வயது 70. இவரது மனைவி தங்கம்மா வயது 65. இவர்களது மகன் அஜேஷ் வயது 39. இவர் கூலி தொழிலாளி. குமரன், தங்கமா ஆகிய இருவரும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிந்து வந்தனர். அஜேசுக்கு திருமணமாகாததால் பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குமரன் வீட்டிற்கு அவரது உறவினரான கமலம் என்பவர் வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அறிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் குமரன், தங்கமா ஆகிய இருவரும் கிடந்தனர். இதில் குமரன் இறந்து கிடந்தார். தங்கம்மா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கமலம் என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டிற்கு வெளியே ஓடி வந்தார். பின்னர் அவர் அக்கம்பக்கத்தினர் மற்றும் மூலமட்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே பொதுமக்கள் குமரன் வீட்டின் முன்பு கூடி நின்றனர்.

இடுக்கி மாவட்டம் காவல் நிலையம்

இதையடுத்து போலீசார் தங்கம்மாவை மீட்டு, சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குமரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இடுக்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தங்கம்மா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து குமரனின் மகன் அஜேசை போலீசார் தேடினர். அவர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். அவரது செல்போன் எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டனர். அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அஜேஷ் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக அஜேசை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை குமரன் வீட்டின் அருகே பொதுமக்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் தூக்கில் அஜேஷ் பிணமாக தொங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இடுக்கி அரசு மருத்துவமனை

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இடுக்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தாய், தந்தையை கொன்றுவிட்டு அஜேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. அவர் எதற்காக பெற்றோரை கொலை செய்தார் என்பது தெரியவில்லை. குடும்பப் பிரச்சினையா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக கொலை சம்பவம் நடந்ததா? என்பது குறித்து மூலமட்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோரை வெட்டி கொலை செய்து விட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம். அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review