அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரும் செந்தில் பாலாஜி மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு..

1 Min Read
ஐகோர்ட்டு
  • சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்த சென்னை உயர் நீதிமன்றம் மேற்கொண்டு அவகாசம் கேட்கக்கூடாது என அறிவுறுத்திவுள்ளது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத் துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார்.

- Advertisement -
Ad imageAd image

இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை  முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கும், இந்த வழக்குக்கும் சம்பந்தம் இல்லை. இந்த வழக்கு ஏற்கனவே பலமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறினர்.

விடுவிக்கக் கோரும் வழக்கு என்பதால் இது தொடர்பாக விரிவாக வாதிட உள்ளதாகவும் அதற்கான வழக்கு விவரங்களை படிக்க வேண்டும் என்பதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனவும் செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் கோரிக்கை வைத்தார்.

அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், வாதத்தை முன்வைக்க தயாராக இருப்பதாக கூறினார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கையை ஏற்று விசாரணயை செப்டம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், மேலும் அவகாசம் கோரக்கூடாது என அறிவுறுத்தினர்.

Share This Article
Leave a review