சர்ச்சை மற்றும் கிஸ்ஸுகிஸ்ஸுவுக்கு பெயர்போனவர் நடிகை வனிதா விஜயகுமார் 2000 ஆம் ஆண்டு நடிகர் ஆகாஷை என்பவரை திருமணம் செய்தார். பின்பு சில ஆண்டுகள் கழித்து அவரை பிரிந்து விவாகரத்து செய்தார். அதன் பிறகு ஆந்திராவை சேர்ந்த ஆனந்த்ராஜ் என்ற தொழில் அதிபரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அதே ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.
இதையடுத்து யூட்யூப் சேனல் தொடங்கிய வனிதா, அதில் விஷுவல் எடிட்டராக பணியாற்றிய பீட்டர் பால் என்பவரை காதலித்து நிச்சயதார்த்தம் செய்தார்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகனும் மகளும் உள்ளனர். மேலும் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாக சர்ச்சையானது.

இந்த விவகாரத்தை அடுத்து வனிதாவும் பீட்டர் பாலும் பிரிந்தனர். பின்பு அவரவர் தொழிலில் இரண்டு பேரும் கவனம் செலுத்தி வந்தனர். பின்னர் சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பீட்டர் பால் மரணமடைந்தார். இதையடுத்து வனிதாவின் முன்னாள் கணவர் பீட்டர் பால் மரணமடைந்து விட்டதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் இந்த செய்திகள் குறித்து தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார் வனிதா விஜயகுமார். அந்த அறிக்கையில், “நான் மறைந்த பீட்டர் பாலை சட்டப்படி திருமணம் செய்யவில்லை. மறைந்த பீட்டர் பாலை நான் ஒருபோதும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை. 2020 ஆம் ஆண்டு நாங்கள் ஒன்றாக இருந்தோம். அது அதே ஆண்டு முடிவடைந்துவிட்டது. நான் பீட்டர் பாலின் மனைவி அல்ல. அவர் என் கணவரும் அல்ல. என் கணவர் இறந்துவிட்டதாக செய்தி பரப்புவதை நிறுத்துங்கள். நான் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.