நடிகர் விஜய்யின் தவெக கட்சிக்கு ஆதரவா.? – நடிகர் ஜெயம் ரவி பதில்..!

2 Min Read

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் சைரன். ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆண்டனி பாக்யராஜ் இயக்கி உள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை நடிகர் ஜெயம் ரவி மதுரையில் உள்ள சினிப்ரியா தியேட்டரில் ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்;- ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று மதுரைக்கு வந்தேன்.

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் சைரன்

மதுரையில் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் ரசிகர்கள் கைதட்டி மகிழ்வது பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இது இயக்குனர் ஆண்டனி பாக்யராஜின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி.

அப்போது சைரன் படத்திற்கு அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தில் நடித்தது எனக்கு மிக திருப்தியான உணர்வை அளிக்கிறது என கூறினார்.

நடிகர் விஜய்யின் தவெக கட்சிக்கு ஆதரவா.? – நடிகர் ஜெயம் ரவி பதில்

நடிகர் சங்க கட்டடம் எப்போது கட்டி முடிக்கப்படும் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, நிச்சயமாக விரைவில் நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும் அதற்கான பணியில் தீவிரமாக திரையுலக நண்பர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என கூறினார்.

அதனை தொடர்ந்து நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்தின் பெயர் வைக்கப்படுமா என கேட்கப்பட்ட கேள்விக்கு, இது குறித்து அறிவிப்பு விரைவில் வரும் என கூறினார்.

நடிகர் விஜய்யின் தவெக கட்சிக்கு ஆதரவா.? – நடிகர் ஜெயம் ரவி பதில்

அதனை தொடர்ந்து நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரவு தெரிவிப்பீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, தன்னுடைய வட்டம் குறுகிய வட்டம் சினிமா அவ்வளவு தான் எனக்கு தெரிந்தது

நடிகர் விஜய் அழைப்பு விடுத்தால் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு விஜய் அண்ணன் அழைப்பு விடுத்தால் வீட்டுக்கு வேண்டுமென்றால் சென்று வரலாம் எனவும் கூறினார்.

நடிகர் விஜய்யின் தவெக கட்சிக்கு ஆதரவா.? – நடிகர் ஜெயம் ரவி பதில்

அதனை தொடர்ந்து நடிகர் விஜய் அரசியல் பயணத்திற்காக திரையுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டால் அவரின் இடத்தை பூர்த்தி செய்ய யாராலும் முடியாது என்றும் தெரிவித்தார்.

Share This Article
Leave a review