தளபதி 68 படத்துக்காக தெலுங்கு இயக்குநரை ஓகே செய்த விஜய்? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

1 Min Read
விஜய் - லோகேஷ் கனகராஜ்

வாரிசு படத்துக்கு பிறகு நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டடிருப்பதால் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

- Advertisement -
Ad imageAd image

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் விஜய் – திரிஷா இருவரும் லியோ படத்துக்காக ஜோடி சேர்ந்திருக்கின்றனர்.மேலும் முக்கிய கதாப்பாத்திரங்களில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இதனையடுத்து விஜய்யின் 68வது படத்தை அட்லி இயக்கப்போகிறார் என கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் தெலுங்கில் கிராக், பாலகிருஷ்ணா நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான வீர சிம்ஹா ரெட்டி படங்களை இயக்கிய கோபிசந்த் மல்லினேனி நடிகர் விஜய்யை சந்தித்து ஒரு கதை சொன்னாராம். அந்தக் கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட உடனடியாக சம்மதித்துவிட்டாராம். தமிழ் – தெலுங்கில் இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு படம் வசூல் ரீதியில் வெற்றிப் படமாக அமைந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இதனால் மீண்டும் தெலுங்கு இயக்குநருடன் விஜய் இணையவிருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Share This Article
Leave a review