நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது தமிழக அரசியலில் ஒரு மற்றம் கொண்டுவந்து அவரது தமிழக வெற்றி கழகம் கட்சி ஆட்சி அமைத்து விட வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகின்றார் . இது வரையிலும் எந்த கட்சியோடும் கூட்டணியை உறுதி படுத்தாமல் இருக்கும் விஜய் , கட்சியின் உள்கட்டமைப்புகளை வலுவூட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் .
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை 120 மாவட்டங்களாக பிரித்து , கட்சியின் மாவட்ட செயலாளர்கள் நியமித்து வருகின்றனர்.
இதுவரை மொத்தம் 6 கட்டமாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்னர். இந்த நிர்வாகிகள் நியமனத்திற்கு ஒப்புதல் பெற விரைவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளரின் மரணம், அக்கட்சியின் தலைவர் விஜய் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகளை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது .

தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி என்கிற அந்தோணி சேவியர் திடீர் மாரடைப்பால் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தவெக தலைவர் விஜய்யும் நெல்லை வடக்கு மாவட்ட செயலாளர் சஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது X பக்கத்தில் ” தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த அன்பிற்குரிய சகோதரர் திரு. சஜி (எ) B.அந்தோணி சேவியர் அவர்கள் காலமானது, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது.
என் மீதும் கழகத்தின் மீதும் அளவற்ற அன்பு கொண்டு கழகப் பணியாற்றி வந்தவர். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.” என்று த வெ க கட்சி தலைவர் விஜய் தந்து இரங்கலை பதிவு செய்துள்ளார் .