இது வரை தமிழகம் பார்த்த சூர்யா வேறு!!
இனி தமிழகம் பார்க்க போகும் சூர்யா கங்குவா!!
என சூர்யா ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள்
கோவையில் நடிகர் சூர்யா ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. சினிமாவில் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்துவரும் முன்னணி நடிகர் சூர்யா. இந்த சூழலில் சிறுத்தை சிவா இயக்குனர் இயக்கத்தில் கங்குவா என்ற பெயரில் 10 மொழிகளில் திரைப்படம் தயாராகி வருகிறது. 3d தொழில்நுட்பத்தின் திரைப்படம் வருவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

நடிகர் சூர்யாவின் முதல் 3டி தொழில்நுட்ப திரைப்படம் இதுவாகும். இதனை அடுத்து ரசிகர்கள் படத்தின் பெயர் வெளியிட்டதை அடுத்து பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேசமயம் போஸ்டரில் இதுவரை தமிழகம் பார்த்த சூர்யா வேறு இனி தமிழகம் பார்க்க போகும் சூர்யா கங்குவா என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.