விஜய்யின் ‘லியோ’ படத்தில் நான் இன்னும் நடிக்கவே ஆரம்பிக்கவில்லை. காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை வந்துள்ளனர். இதன்பிறகு தான் எனக்கான காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போதைய சென்சேஷனல் இயக்குனராக வலம் வருகிறார் லோகேஷ் கனகராஜ். இவருடைய படத்தில் நடிப்பதற்காக டாப் ஹீரோக்களே காத்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் பிரம்மிப்பாக பேசி வருகின்றனர். மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர் வெற்றிகளை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக ‘விக்ரம்’ வெளியானது.
நடிகர் கமலின் வெறித்தனமான ரசிகர் என சினிமாவில் தன்னை அடையாளப்படுத்தி கொண்ட லோகேஷ் கனகராஜ், அவரது நடிப்பிலே ‘விக்ரம்’ படத்தை இயக்கி கோலிவுட் சினிமாவே அதிர வைக்கும் வெற்றியை பெற்றார்.

கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் நடித்து மிரள வைத்தார் சூர்யா. கடந்தாண்டு வெளியான இந்தப்படம் அதிரிபுதிரியான வெற்றியை பெற்று லோகேஷின் மார்கெட்டை வேறலெவலில் உயர்த்தியது.
லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணி, மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். ‘லியோ’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து முடிந்தது. காஷ்மீர் படப்பிடிப்பில் இயக்குனர்கள் மிஷ்கின், கெளதம் மேனன் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், திரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இந்தப் படம் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பகிர்ந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை எகிறடித்து வருகிறது. ‘லியோ’ படத்தில் நடிக்கும் மன்சூர் அலிகான் அளித்த பேட்டியில், விஜய்யின் ‘லியோ’ படத்தில் நான் இன்னும் நடிக்கவே ஆரம்பிக்கவில்லை. காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை வந்துள்ளனர். இதன்பிறகு தான் எனக்கான காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.

என்னிடம் அதிகமான தேதிகளையும் கேட்டு வாங்கியுள்ளனர். நடிகர் விஜய்யுடன் பத்து படங்களுக்கு மேலாக இணைந்து நடித்துள்ளேன். ‘தேவா’ படத்திற்கு பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் ‘லியோ’ படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரபல இயக்குனர்கள் மிஷ்கின், கெளதம் மேனன் மற்றும் அர்ஜுன், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் என்ற பெருமையுடன் ரெடியாகி வருகிறது ‘லியோ’. விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் இந்தப்படம் கோலிவுட் சினிமாவே அதிகம் எதிர்பார்க்கும் படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் ‘லியோ’ படம் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பகிர்ந்துள்ள இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.